Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • பிளாக் டீ... உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது... டாக்ஸின்களை வெளியேற்றுகிறது

பிளாக் டீ... உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது... டாக்ஸின்களை வெளியேற்றுகிறது

By: Nagaraj Sun, 18 Sept 2022 4:40:21 PM

பிளாக் டீ... உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது... டாக்ஸின்களை வெளியேற்றுகிறது

சென்னை: பிளாக் டீ உடலில் தங்கியுள்ள டாக்ஸின்களை வெளியேற்றுகிறதா! தெரிந்து கொள்ளுங்கள்.

பிளாக் டீ குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ப்ளாக் டீயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் உடலின் எனர்ஜி அதிகரிப்பதுடன், ஸ்டெமினா அதிகரிக்கும். மேலும் அது உடலில் தங்கியுள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.

இதயத்திற்குள் ரத்த ஓட்டம் சீராக இருத்தல், கொழுப்புப் பொருட்களை இதயத்தில் அண்ட விடாமல் தடுத்தல், பல இதய நோய்களை தவிர்த்தல், இதயத்தில் உள்ள தசைகளை ஆரோக்கியமாக வைத்திருத்தல் போன்ற பல நன்மைகளை தருகிறது ப்ளாக் டீ.

body weight,vital role,fat content,bone,bacteria ,உடல் எடை, முக்கிய பங்கு, கொழுப்பு சத்து, எலும்பு, பாக்டீரியா

இதில் உள்ள பாலிஃபீனால்கள் புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடுகிறது. ப்ளாக் டீயில் உள்ள TF-2 என்ற பொருள் புற்றுநோய் செல்களை அழிப்பதுடன், பிற சாதாரண செல்கள் தாக்கப்படாமல் இருக்கவும் உதவுகிறது.

ப்ளாக் டீயில் உள்ள டானின் என்ற வேதிப் பொருட்கள் நோய்கள் உருவாக காரணமான பலவிதமான வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை நம் உடலில் அண்டவிடாமல் தடுப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிரிக்கிறது. பிளாக் டீயில் உள்ள பைட்டோகெமிக்கல்கள் எலும்புகளையும், எலும்புத் திசுக்களை வலுவாக்குகிறது. தேவையில்லாத கொழுப்புச் சத்துக்கள் குறைத்து உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Tags :
|