Advertisement

கண்பார்வை மங்குதல் குறைபாடு போக்க இயற்கை வழி

By: Nagaraj Fri, 28 Aug 2020 08:26:23 AM

கண்பார்வை மங்குதல் குறைபாடு போக்க இயற்கை வழி

கண் பார்வை மங்குதல் போன்ற குறைபாடுகளை போக்க இயற்கை வழியை மேற்கொண்டால் போதும். பளிச்சென்ற கண்பார்வை பெறலாம்.

முந்தைய காலகட்டத்தில் 80 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்குதான் கண் குறைபாடு ஏற்படும்.தற்போதைய காலத்தில் சிறு வயதிலேயே கண் பிரச்சனைகள்,கண் பார்வை மங்குதல் போன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன.

இதற்கு காரணம் தற்போதைய உணவுப்பழக்கம், தூக்கமின்மை போன்றவைகளே ஆகும்.இந்த குறையை போக்க நாம் மருத்துவரை அணுகி கண்ணாடி அணிந்து கொள்கிறோம். இதனால் கண் குறைபாடு நிரந்தரமாக சரி ஆகுமா என்றால் சரி ஆகாது. இதற்கு நிரந்தர தீர்வு என்ன என்பதை பார்ப்போம்.

eyesight,vallarai spinach powder,honey,milk,buttermilk ,கண்பார்வை, வல்லாரை கீரைப்பொடி, தேன், பால், மோர்

தேவையானவை:

வல்லாரை கீரை பொடி – 1 தேக்கரண்டி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)
தேன் – 1 தேக்கரண்டி
மோர் அல்லது பால் – 1 டம்ளர்

செய்முறை: வல்லாரை கீரை பொடி மற்றும் தேன் இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின் 1 டம்ளர் மிதமான சூடு உள்ள பால் அல்லது 1 டம்ளர் மோரில் இந்த கலவையை கலந்து தினமும் 1 முறை 10 நாட்கள் தொடர்ந்து குடிக்க வேண்டும்.

10 நாட்கள் கழித்து மாதம் 2 முறை குடித்து வர கண் பார்வையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

Tags :
|
|