Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • சுண்டைக்காயின் இலை, வேர் என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது

சுண்டைக்காயின் இலை, வேர் என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது

By: Nagaraj Fri, 16 Dec 2022 10:04:22 AM

சுண்டைக்காயின் இலை, வேர் என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது

சென்னை: சுண்டைக்காயின் இலைகள், வேர்கள், கனிகள் என அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டது. சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களால் அவதிப்படுபவர்கள் உணவில் அடிக்கடி சுண்டைக்காய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இரண்டு வகைகள் உள்ளது. இதில் மலைக்காடுகளில் காணப்படும் மலைச்சுண்டை வற்றல் செய்யப் பயன்படுகின்றன. நாட்டுச் சுண்டைக்காயை பச்சையாக சமைத்து உண்ணலாம்.

சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்றில் உள்ள கிருமிகள் அழியும். வயிற்றுப் புண்ணை குணமாக்கும். சுண்டைக்காய் வற்றலை நல்லெண்ணையில் பொரித்து சாப்பிடுவது நல்லது. சுண்டைக்காயுடன் பூண்டு, வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால், இருமல், மூலச்சூடு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்ற பிரச்சனைகளை சரியாகும்.

gourd,medicinal,leaves,peptic ulcer ,சுண்டைக்காய், மருத்துவக்குணம், இலைகள், வயிற்றுப்புண், குணமாகும்

பிஞ்சு சுண்டைக்காயைச் சமைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டை சளி, நெஞ்சில் ஏற்படும் சளிக்கட்டு குறையும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை கால் நடுக்கம், உடல் சோர்வு, வயிற்று வலி ஆகியவை ஏற்படும். இதனை தடுக்க சுண்டைக்காயை நெய்யில் வறுத்து பொடி செய்து, சோற்றில் பிசைந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.


சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் ரத்தத்தை சுத்தப்படுத்தி உடல் சோர்வை நீக்கும். தலைசுற்றல், வாந்தி, மயக்கம், தொண்டைக்கட்டு போன்றவை குணமாகும். சுண்டைக்காய் வற்றல் தூள், 2 சிட்டிகை அளவு, 1 டம்ளர் மோரில் கலந்து பகலில் மட்டும் குடித்து வந்தால் அஜீரண பிரச்சனை சரியாகும்.

Tags :
|
|