Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • மன அழுத்தத்தை போக்க மூச்சுப்பயிற்சி செய்யுங்கள்!!!

மன அழுத்தத்தை போக்க மூச்சுப்பயிற்சி செய்யுங்கள்!!!

By: Nagaraj Mon, 21 Sept 2020 09:59:11 AM

மன அழுத்தத்தை போக்க மூச்சுப்பயிற்சி செய்யுங்கள்!!!

மன அழுத்தத்துக்கு பிராணாயாமமும் தியானமும் நல்ல நிவாரணி. காரணம், மனதுக்கும் மூச்சுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

‘‘யாருக்கு உடல் பலமாக இருக்கிறதோ, அவர்களுக்கே மனபலமும் இருக்கும். அதனால்தான் Sound mind in a sound body என்று சொன்னார்கள். இன்றோ உடல்நலக்குறைவால் ஏற்படும் மன அழுத்தத்தைவிட வாழ்க்கைமுறைகளால் ஏற்படும் மன அழுத்தமே அதிகம்.

குழந்தைகள் கூட ‘ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு’ என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்’’. மன அழுத்தத்தை மாயமாக்கும் பிராணாயாமம் மிகவும் சிறந்தது. ‘‘மன அழுத்தத்துக்கு பிராணாயாமமும் தியானமும் நல்ல நிவாரணி. காரணம், மனதுக்கும் மூச்சுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

depression,shortness of breath,immunity,peace of mind ,மன அழுத்தம், மூச்சுப்பயிற்சி, நோய் எதிர்ப்பு சக்தி, மன அமைதி

கோபமாக இருக்கும்போது நம் மூச்சு வேகமாக இருப்பதையும் அமைதியாக இருக்கும்போது மூச்சு சீராக இருப்பதையும் கவனித்துப் பாருங்கள். ஆகவே, மூச்சு சீராக இருக்கப் பயிற்சி எடுத்தால் மன அழுத்தம் தானாகவே குறைந்து, மனம் அமைதியடையும். செய்யும் வேலைகளில் கவனமும் இருக்கும். பல எண்ணங்கள் மனதுக்குள் அலைமோதுவதால்தான் மன அழுத்தம் வருகிறது.

மூச்சுப்பயிற்சி செய்யச்செய்ய, தேவையற்ற எண்ணங்கள் தானாகவே குறைய ஆரம்பித்துவிடுவதை நீங்களே அனுபவப்பூர்வமாக உணர்வீர்கள். நாம் சுவாசிப்பதில் இரண்டு வகைகள் உண்டு. முதலாவது Chest Breathing என்ற மேலோட்டமான சுவாசம், இரண்டாவது Belly Breathing என்ற ஆழமான சுவாசம்.

Chest Breathing முறையில் மார்புக்கு கீழே உள்ள Diaphragm என்ற தசைகள் போதுமான அளவு விரிவடைவது இல்லை. மேலும், இதில் வேகமாக சுவாசிப்பதால் கார்பன் டை ஆக்ஸைடும் முழுமையாக உடலில் இருந்து வெளியேறாது. கோபம் போன்ற உணர்ச்சிக் கொந்தளிப்போடு நாம் இருக்கும்போது நமக்குள் நடைபெறுவது இந்த Chest Breathing முறைதான்.

அதுவே, Belly Breathing என்ற ஆழமான சுவாசம் நடைபெறும்போது மன அழுத்தம், படபடப்பு, ரத்த அழுத்தம், அதீத இதயத்துடிப்பு போன்றவை குறைகிறது. மனது அமைதி அடைந்தபிறகு ரத்த அழுத்தம், இதய துடிப்பு சீராகிறது. இதன்மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது, நல்ல ரத்த ஓட்டம், செரிமானத்திறன் போன்ற பலன்களும் அதிகமாகும். இந்த சுவாச முறையில் ஆக்சிஜன் உடலில் அதிகமாக சேர்வதால், உடல் வலி இருந்தாலும் குறையும். அதனால்தான் மன அழுத்தத்துக்கு மூச்சுப்பயிற்சி செய்யச் சொல்கிறார்கள். இதை தொடர்ந்து செய்வதால் மன அழுத்தம் குறையும்.

Tags :