Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • வைட்டமின் சி உட்பட எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய ப்ரோக்கோலி

வைட்டமின் சி உட்பட எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய ப்ரோக்கோலி

By: Nagaraj Wed, 12 Oct 2022 10:31:14 AM

வைட்டமின் சி உட்பட எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய ப்ரோக்கோலி

சென்னை: ஊட்டச்சத்துக்கள் வழங்குகிறது... ப்ரோக்கோலியில் இருக்கும் வைட்டமின் சி உள்ளிட்ட எண்ணற்ற ஊட்டசத்துக்கள் பல்வேறு ஆரோக்கிய நண்மைகளை உடலுக்கு வழங்குகிறது.


ப்ரோக்கோலி ஒரு ஆரோக்கியமான உணவு பொருளாகும். இந்த ப்ரக்கோலி மத்திய தரைக்கடல் பகுதியை சுற்றியுள்ள நாடுகளை பூர்வீகமாக கொண்டதாகும். பழங்காலத்தில் ரோமானியர்களின் உணவில் ப்ரோக்கோலியை அதிகம் பயன்படுத்தினர். தற்போது உலகெங்கிலும் உள்ள மக்கள் ப்ரோக்கோலியை அதிகம் விரும்பி உண்கின்றனர்.

ப்ரோக்கோலி முட்டைகோஸ், காலிஃப்ளவர் குடும்பத்தை சார்ந்தது. ப்ரோக்கோலியில் பொட்டாசியம், இரும்பு, காப்பர், ப்ரோட்டீன், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் கே, சி, கே உள்ளிட்ட பல வகையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும், இவை பல நோய்களை விரட்டும் தன்மை கொண்டது. இந்த ப்ரோக்கோலியை சாலட் முதல் சூப் வரை, உங்கள் அன்றாட உணவில் சேர்த்து சாப்பிடலாம்.


புற்று நோய் வராமல் தடுக்கும்: ப்ரோக்கோலியில் சல்போரபேன் எனப்படும் வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இது புற்று நோய்களின் செல்களின் அடிப்படை வளர்ச்சியை இயற்கையாகவே அழிக்கும் சக்தியை பெற்றுள்ளது.

digestion,broccoli,great food,constipation,help ,செரிமானம், ப்ராக்கோலி, சிறந்த உணவு, மலச்சிக்கல், உதவும்

இதயத்திற்கு பயன்: ப்ரோக்கோலியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் இந்த ப்ரோக்கோலியில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை அதிகம் சேரவிடாமல் தடுத்து, இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் நலன் பயக்கிறது.

தைராய்டுக்கு தடை: ப்ரோக்கோலி தைராய்டுக்கு மிகச்சிறந்த மருந்தாகும். இதனை பச்சையாக உண்பதினால் தைராய்டு சுரப்பியின் செயல்பாடு கட்டுக்குள் இருக்கும்.

கண் பார்வை: ப்ரோக்கோலியை அடிக்கடி சமைத்து சாப்பிடுபவர்களுக்கு ப்ரோக்கோலியில் இருக்கும் சல்போரபேன் சத்துக்கள் கண்களில் அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும் எதிர்காலங்களில் கண் பார்வை மங்குதல், கண் புரை போன்ற நோய்கள் ஏற்படாமல் கண்களை பாதுகாக்கிறது.

நீரழிவு நோய்களுக்கு நல்லது: ப்ரோக்கோலியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகவும், கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. இதனால் நீரழிவு நோயாளிகள் தாராளமாக ப்ரோக்கோலி சாப்பிடலாம்.

செரிமானம் பிரச்சனை: பைபர் நிறைந்த ப்ரோக்கோலி செரிமான பிரச்சனைகள், மலச்சிக்கல் கொண்டவர்களுக்கு சிறந்த உணவாக இருக்கிறது. இது வயிறு மற்றும் குடல்களில் செரிமானத்திற்கு உதவும்.

Tags :