Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கால்சியம், இரும்பு சத்துக்கள் மிளகில் அடங்கியுள்ளன

கால்சியம், இரும்பு சத்துக்கள் மிளகில் அடங்கியுள்ளன

By: Nagaraj Thu, 03 Nov 2022 11:56:27 PM

கால்சியம், இரும்பு சத்துக்கள் மிளகில் அடங்கியுள்ளன

சென்னை: மிளகில் என்னென்ன மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் உள்ளன என்பதை குறித்து தெரிந்து கொள்ளுங்கள். கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் உள்ளன.

மிளகு சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சளி, கோழை, இருமல் நீக்குவதற்கும் நச்சு முறிவு மருந்தாகவும் பயன்படுகிறது. மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது

உடலில் உண்டாகும் காய்ச்சலைப் போக்கும் தன்மை உடையது. இது காரமும் மணமும் உடையது. உணவைச் செரிக்க வைப்பது. உணவில் உள்ள நச்சுத் தன்மையைப் போக்க வல்லது.

pepper,alkalinity,gas remover,nature,benefits ,மிளகு, காரம், வாயுவை அகற்றும், தன்மை, நன்மைகள்


மிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும். அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.

மிளகு, சுக்கு, சிற்றரத்தை, அதி மதுரம் ஆகிய இவற்றை சமமாக எடுத்துக் கஷாயம் செய்து மூன்று வேளை குடித்து வர ஜலதோஷத்தோடு உள்ள ஜூரமும் இருமலும் குணமாகும். சின்ன வெங்காயம், மிளகு, கிராம்பு இவைகளை மையாக அரைத்து சிறிது தேனில் கலந்து சாப்பிட்டு வர, நெஞ்சுவலி நீங்கும்.

அடுக்குத் தும்மல் பிரச்சனை அடிக்கடி வருகிறதா? எனில், மிளகை தூள் செய்து அந்தப் பொடியை நெருப்புத் தணலில் இட்டு அதிலிருந்து வரும் புகையை இழுக்க அடுக்குத் தும்மல் நின்று விடும். இருமல் தொந்தரவு இருந்தால் டீ அல்லது பாலில் மிளகு, ஏலக்காய், இஞ்சி, ஓமம் ஆகியவற்றை அரைத்துப் போட்டு குடியுங்கள் இருமல் பிரச்சனை நீங்கும்.

Tags :
|
|