நீரிழிவு நோயாளிகள் பேரிச்சம்பழம் சாப்பிடலாமா? சந்தேகத்திற்கு தீர்வு
By: Nagaraj Wed, 12 Apr 2023 05:39:25 AM
சென்னை: பேரிச்சம்பழம் சாப்பிடலாமா?... நீரிழிவு நோயாளிகளுக்கு பல்வேறு உணவு கட்டுப்பாடுகள் இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் பேரிச்சம்பழம் சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது.
பேரிச்சம்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருந்தாலும், நீரிழிவு நோயாளிகள் குறைந்த அளவிலேயே அவற்றை உட்கொள்ளலாம்.
தினமும் இரண்டு அல்லது மூன்று பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோயாளிகள் எந்த பிரச்சனையும் சந்திக்க மாட்டார்கள். ஆனால் இதில் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ளதால் அதை அதிகமாக உட்கொள்ளக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு நார்ச்சத்து அதிகம் தேவைப்படுவதால் தினமும் இரண்டு அல்லது மூன்று பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.