Advertisement

காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா?

By: Monisha Mon, 11 July 2022 7:37:43 PM

காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா?

காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா? பதில் சொல்கிறார், பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.

காலை உணவுக்குப் பதிலாக வெறும் ஜூஸ் மட்டுமே எடுத்துக் கொள்வது சரியான பழக்கமல்ல. திட உணவுகளில் ஏதேனும் ஒன்றை சிறிதளவாவது எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.காலை உணவுக்கு ஜூஸ், அதன் பிறகு நேரடியாக மதிய உணவு சாப்பிடுவது செரிமானத்துக்கும் ஏற்றதல்ல. காலையில் சூரிய உதயம் தொடங்கி, மாலையில் சூரிய அஸ்தமனம் ஆகும் வரைதான் நம் உடலின் செரிமான இயக்கம் சீராக இருக்கும்.

juice,breakfast,good,bad ,காலை ,உணவு, ஜூஸ்,உடல்,

இரவு முழுக்க சாப்பிடாமல் இருப்பதால்தான் காலையில் `பிரேக்கிங் தி ஃபாஸ்ட்' என்ற பொருள்படும்படி பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறோம்.

சமைத்த உணவை காலையில் எடுத்துக் கொள்ளும் சூழல், நேரம் இல்லாதவர்கள் நம்மில் பலர் இருக்கிறார்கள்.அப்படிப்பட்டவர்கள் ஒரு கைப்பிடி அளவுக்கு பாதாம், அக்ரூட், பேரீச்சம் பழம், உலர் திராட்சை போன்றவற்றுடன் ஏதேனும் ஒரு பழ ஸ்மூத்தி எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினார்.

Tags :
|
|