சாப்பிட்டதும் குளிக்கலாமா?
By: Monisha Mon, 18 July 2022 7:57:18 PM
சாப்பிட்டதும் செரிமானம் நடைபெறுவதற்கு உடல் ஒத்துழைக்கவேண்டும் சாப்பிட்ட பிறகு குளிக்கும் வழக்கத்தை சிலர் பின்பற்றுகிறார்கள். காலையில் எழுந்ததும் குளிக்காமல், சாப்பிட்ட பிறகு குளிக்கும் வழக்கத்தை சிலர் பின்பற்றுகிறார்கள்.அது தவறான பழக்கமாகும். அப்படி குளிக்கும்போது உடலில் ரத்த ஓட்டம் குறையும். அதனால் செரிமானம் நடைபெறுவது தாமதமாகும்.
சாப்பிட்டதும் செரிமானம் நடைபெறுவதற்கு உடல் ஒத்துழைக்கவேண்டும். அந்த நேரத்தில் குளித்தால் செரிமானம் மந்தமாகிவிடும். அதனால் குடலில் உணவு அப்படியே தங்கி விடும். மலச்சிக்கல், குமட்டல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடும். உடலும் சோர்வுக்குள்ளாகும்.
சாப்பிட்ட பிறகு அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள்ளாக குளிக்கக்கூடாது என்று ஆயுர்வேதம் கூறுகிறது.சாப்பிடும்போது, செரிமானத்திற்கு பயனுள்ள வகையில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஆனால், சாப்பிட்ட உடனே குளிக்கும்போது, உடல் வெப்பநிலை குறைந்து, செரிமானத்தை மந்தமாக்கிவிடும் என்று குறிப்பிடுகிறது.
நவீன மருத்துவ விஞ்ஞானம் கூட இதனை உறுதிபடுத்தியுள்ளது. 'சாப்பிட்டதும் குளிப்பதால் உடல் வெப்பநிலை குறைகிறது.ரத்த ஓட்டமும் திசை திருப்பப்படுகிறது. இதன் விளைவாக, செரிமானத்திற்கு உதவும் ரத்தம், வெப்பநிலையை பராமரிக்க சருமத்தை நோக்கி பாய ஆரம்பிக்கிறது. இதனால் செரிமான செயல்பாடு தாமதமாகி பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரும்' என்று கூறுகிறது. சாப்பிடுவதற்கு முன்பு குளிப்பதுதான் உடலுக்கு நல்லது.