Advertisement

பப்பாளி பழத்தை தினமும் சாப்பிடலாமா?

By: Monisha Wed, 11 Nov 2020 3:46:29 PM

பப்பாளி பழத்தை தினமும் சாப்பிடலாமா?

பப்பாளியில் வைட்டமின் எ, வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இவை உங்கள் உடலில் ஏற்படக்கூடிய செல் அழிவினை தடுத்து உங்களை ஆரோக்கியமாக வைக்கும்.

பப்பாளியில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் உள்ளது. உடல் எடையினை குறைக்க நார்ச்சத்தானது மிகவும் முக்கிய பங்கினை வகிக்கின்றது. தினமும் பப்பாளி பழத்தினை உட்கொண்டு வந்தால் உங்களின் கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.

நமது உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கழிவுகள் பல நோய்களுக்கு வழிவகுக்கின்றது. பப்பாளியில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை மலசிக்கல் ஏற்படாமல் தடுக்க உதவும்.

papaya,vitamin,antioxidant,beta carotene,fiber ,பப்பாளி,வைட்டமின்,ஆன்டிஆக்ஸிடண்ட்,பீட்டா கரோட்டின்,நார்ச்சத்து

கண்களின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் எ மிகவும் அவசியம். பப்பாளியில் அதிக அளவு வைட்டமின் எ நிறைந்துள்ளது. இதனை தினமும் உட்கொண்டு வந்தால் உங்களின் கண் பார்வையினை அதிகரிக்க உதவும். மேலும் உங்களுக்கு மாலை கண், கிட்ட பார்வை, தூர பார்வை போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும்.

பப்பாளி பழத்தில் அதிக அளவு உள்ள நார்ச்சத்தானது உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்கும். எனவே நீரிழிவு நோயாளிகள் தயங்காமல் தங்கள் உணவில் பப்பாளியினை சேர்த்துக்கொள்ளலாம்.

Tags :
|