Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கர்ப்பிணிகள் விளையாடுவதால் கருச்சிதைவு ஏற்படுமா ?

கர்ப்பிணிகள் விளையாடுவதால் கருச்சிதைவு ஏற்படுமா ?

By: Karunakaran Fri, 09 Oct 2020 4:10:45 PM

கர்ப்பிணிகள் விளையாடுவதால் கருச்சிதைவு ஏற்படுமா ?

விளையாட்டு நமது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒரு கருவியாகும். கருச்சிதைவு என்பது வாழ்வின் மிகக் கொடுரமான நிகழ்வாகும். இதை எந்த பெண்ணாலும் தாங்கிக் கொள்ள முடியாது. கருச்சிதைவு, விளையாடுவதால் ஏற்படுமா என்ற எண்ணம் நிறைய பெண்களிடம் ஏற்படலாம். விளையாட்டு கர்ப்ப காலத்திலும் செய்யலாம், ஆனால் நாம் ஜாக்கிரதையாக செய்ய வேண்டும்.

நாம் மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடுவதை இந்த சமயத்தில் முடிந்த வரையில் தவிர்க்க வேண்டும். இதனால் கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. மெதுவாகவும் நிதானமாகவும் விளையாட விரும்பும் பெண்களுக்கு பெண்களுக்கு நீச்சல் ஒரு சிறந்த விளையாட்டு கலந்த உடற்பயிற்சியாகும். கர்ப்ப காலத்தில் இதை நாம் பயிற்சி செய்வது கேடு விளைவிக்காது. ஆனால் அதிக நேரம் தண்ணீரில் இருத்தல் மற்றும் மூச்சை அதிக நேரம் இழுத்துப் பிடிப்பது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும். வெளி விளையாட்டுகளைவிளையாடுவதால் எந்த வித கருச்சிதைவும் ஏற்படுவது கிடையாது. ஆனால் நம்மை நாம் எப்போம் பத்திரமாகவும் கடினமாக செயல்களை செய்யாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

sports,miscarriage,pregnanacy,womens ,விளையாட்டு, கருச்சிதைவு, கர்ப்பம், பெண்கள்

ஜாக்கிங் கர்ப்ப காலத்தில் மிக உகந்த விளையாட்டுப் பயிற்சியாகும். மருத்துவ ரீரியாக இதற்கு எந்த வித தடைகளும் இல்லை என்ற உறுதி இருந்தால் நிச்சயம் ஜாக்கிங் செய்யலாம். நிதானமாகவும் தேவையான அளவும் ஜாக்கிங் செய்வது எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. டென்னிஸ், பேட்மிட்டன் ஆகிய விளையாட்டுகள் மிகவும் பாதுகாப்பான விளையாட்டுகளாகும். எந்த விளையாட்டாக இருந்தாலும் கவனமாக இருப்பது அவசியம்.

கால் பந்து, கைப்பந்து, ஆகிய நிறைய நபர்களுடன் விளையாடும் விளையாட்டுகளை தவிர்கக வேண்டும். அதிக எடை உள்ள பொருட்களை தூக்குதல்விளையாட்டுகளை செய்யவே கூடாது. இது முற்றிலும் தவிர்க்க வேண்டிய விளையாட்டுகளாகும். இவை நிச்சயம் கருச்சிதைவை ஏற்படுத்தக் கூடியவைகளாகும்.டைவிங், பாராசூட்டிங், மார்சியல் ஆர்ட்ஸ் போன்ற விளையாட்டுகளை அறவே தவிர்க்க வேண்டும். இதனால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். விளையாட்டுகளை செய்வது நமது உடலின் ஆரோக்கியத்திற்கா அல்லது கேடு விளைவிப்பதற்காக என்று யோசித்து செயல்படுவது நல்லது.

Tags :
|