Advertisement

இரவு நேரத்தில் தயிர் சாப்பிடலாமா? கூடாதா!!!

By: Nagaraj Sun, 24 July 2022 4:32:28 PM

இரவு நேரத்தில் தயிர் சாப்பிடலாமா? கூடாதா!!!

சென்னை: இரவில் தயிர் சாப்பிடலாமா?... தயிருக்கு உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும் தன்மை உண்டு. அதனால்தான் பரவலாக அது உபயோகத்தில் இருக்கிறது. தயிரில் உள்ளடங்கி இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் செரிமானம் சீராக நடைபெற உதவும். குடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.

பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்பதால் உடல் உஷ்ணத்துடன் காணப்படும். அந்த சமயத்தில் தயிர் சாப்பிடுவது உடல் சூட்டை தணிக்க உதவும். அதனால்தான் சாப்பிடும்போது தயிரை தவிர்க்காமல் உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள்.

night,buttermilk,curd,phlegm,body temperature,suitable ,இரவு, மோர், தயிர், சளி, உடல் வெப்ப நிலை, ஏற்றது

சிலர் தயிரை இரவு உணவிலும் சேர்த்துக்கொள்வார்கள். இரவு நேரத்தில் உடலின் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும். அந்த சமயத்தில் தயிரை சேர்த்துக்கொண்டால் சளிப்பிரச்சினை உருவாக வாய்ப்பிருக்கிறது. அதிலும் இருமல், ஆஸ்துமா பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்கள் தயிரை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அது சளியை அதிகப்படுத்திவிடும்.

ஆனால் மோர் எல்லா நேரத்திற்கும், எல்லோருக்கும் ஏற்றது. மோரில் சிறிதளவு மிளகுத்தூள் கலந்து பருகலாம். அது உடல் வெப்பநிலையை அதிகரிக்க செய்யும் என்பதால் சளி பிரச்சினை ஏற்படாது.

Tags :
|
|
|