Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ஒற்றைக் காலில் நிற்க முடியுமா? ஆய்வு கூறும் பதில்..

ஒற்றைக் காலில் நிற்க முடியுமா? ஆய்வு கூறும் பதில்..

By: Monisha Fri, 08 July 2022 9:07:23 PM

ஒற்றைக் காலில் நிற்க முடியுமா? ஆய்வு கூறும்  பதில்..

நான் ஒற்றைக்காலில் 10 என்ன 100 எண்ணும்வரைகூட நிற்பேன் என்று அலட்சியத்துடன் கடந்து செல்பவர்கள் கவனிக்க வேண்டிய ஆய்வு இது என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

அதுவும், பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் தேர்வாகி, இந்த ஆய்வுக் கட்டுரை பிரசுரிக்கப்பட்டதால்தான் உலகமே உற்றுநோக்கும் ஆய்வாகப் பரபரப்பூட்டியிருக்கிறது.

health,leg,one,research ,ஒற்றைக்கால்,மெடிக்கல், நோய்,ஆய்வு,

காரணம், 10 நொடிகள்கூட நிற்கமுடியாதவர்களுக்கு சர்க்கரை நோய், உடல் பருமன், எலும்பு - தசை - நரம்பு மண்டலங்களில் பாதிப்பு எனப் பல்வேறு பிரச்னைகள் இருந்திருப்பது தெரியவந்திருக்கிறது.

இந்த பத்து நொடி சோதனையை செய்து பார்க்க ஆசைப்படுகிறீர்களா? சுவரில் சாய்மானமாக இருக்காமல், அறையின் நடுவில் வந்து நில்லுங்கள். கைகள் எதையும் பற்றியிருக்கக்கூடாது. ஒரு காலைத் தூக்கி, இன்னொரு காலில் முட்டிக்கு அருகே அந்தப் பாதத்தை வையுங்கள். கைகளைத் தலைக்கு மேலே தூக்கிக் கொண்டு ஒன்று, இரண்டு என்று பத்து வரை எண்ணுங்கள்.

பிறகு இரண்டு பாதங்களையும் தரையில் வைத்து ரிலாக்ஸ் செய்யுங்கள். முதல்முறை தடுமாற்றம் இருக்கலாம். அதன்பின் நீங்களே ஜாலியாகி விடுவீர்கள்.

Tags :
|
|
|