Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கொழுப்பை கரைப்பதில் கொள்ளுக்கு இணை கொள்ளு மட்டுமே

கொழுப்பை கரைப்பதில் கொள்ளுக்கு இணை கொள்ளு மட்டுமே

By: Nagaraj Sun, 31 July 2022 2:46:48 PM

கொழுப்பை கரைப்பதில் கொள்ளுக்கு இணை கொள்ளு மட்டுமே

சென்னை: இளைத்தவனுக்கு எள்ளு என்பது போன்று கொழுத்தவனுக்கு கொள்ளு என்று சொல்வார்கள். உடலில் இருக்கும் கொழுப்பை கரைப்பதில் கொள்ளுக்கு இணை கொள்ளு மட்டும்தான். கொழுப்பை மட்டும் கரைக்கும் என்று கொள்ளை ஒதுக்காமல்எல்லோரும் எடுத்துகொள்ள கூடிய ஆரோக்கியமான உணவு என்று சொல்லலாம்.

ஆயுர்வேதம், சித்த வைத்தியம், வீட்டு வைத்தியம் என அனைத்திலுமே கொள்ளுக்கும் இடம் உண்டு. இரும்புச்சத்து, வைட்டமின், புரதம் கொண்டிருக்கும் இது உடலில் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கவும் செய்யும். இன்ன பிற மருத்துவக்குணங்களையும் கொண்டிருக்கும். உடல் தொப்பை குறைய கொள்ளுவை பயன்படுத்தும் முறை குறித்து பார்க்கலாம்.


கொள்ளை ஊறவைப்பது, கொள்ளு ரசம் வைப்பது, கொள்ளு துவையல் செய்வது, கொள்ளு சூப், கொள்ளு குழம்பு, கொள்ளுஊறவைத்த நீர் என்று பலவகை உண்டு. அந்த வகையில் கொள்ளு சாறு தொப்பை குறைய வெகுவாக உதவும்.

coffee,tea,milk should be avoided on an empty stomach ,
கொள்ளு, காபி, டீ, பால், தவிர்க்க வேண்டும், வெறும் வயிற்றில், தொப்பை

கொள்ளு சாறு எந்த விதமான சுவையுமில்லாமல் இருக்கும். எனினும் இதன் பலனையும் மிக விரைவாகவே பார்க்கலாம். 5 டீஸ்பூன் அளவு கொள்ளை முன் தினம் இரவு ஊறவைக்கவும்.


மறுநாள் காலை அந்த நீரோடு கொள்ளை அரைத்து வடிகட்டவும். அதிக நீர் சேர்க்க வேண்டாம். சற்று அடர்த்தியாக இருக்கும் இந்த சாறில் தேவையெனில் சிறிதளவு வெதுவெதுப்பான நீர் சேர்க்கவும்.

காலை வெறும் வயிற்றில் அரை டம்ளர் அளவு இந்த கொள்ளுச்சாறை குடித்து வரவேண்டும். இது குடிக்கும் போது காபி, டீ, பால் பானங்களை தவிர்க்க வேண்டும். சாறு குடித்த பிறகு ஒரு மணி நேரம் வரை எதையும் குடிக்க வேண்டாம். தொடர்ந்து ஒருமாதம் வரை இதை குடித்தாலே பலன் தெரியும்.
குறிப்பு: 5 டீஸ்பூனுக்கு மேல் இதை எடுக்க வேண்டாம். இவை அதிக உஷ்ணத்தை கொடுக்ககூடியது.

Tags :
|
|