Advertisement

உடலுக்கு இரும்புச்சத்தை அள்ளித்தரும் ஏலக்காய்

By: Nagaraj Sat, 26 Sept 2020 10:17:17 PM

உடலுக்கு இரும்புச்சத்தை அள்ளித்தரும் ஏலக்காய்

ஏலக்காய் ஒரு வாசனை பொருளாக தான் பார்க்கின்றார்கள்.
ஆனால் ஏலக்காயில் பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து, விட்டமின் சத்துக்கள் எல்லாம் உள்ளன. அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்டது.

தினமும் ஒரு ஏலக்காயை மென்று உண்டு வந்தாலே பல நோய்கள் குணமாகும். ஒரு சிலருக்கு எவ்வளவுதான் உணவு கட்டுப்பாடோடு இருந்து வந்தாலும் செரிமான பிரச்சனை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் ஏலக்காயை மென்று சாப்பிட்டு வந்தால் உடலில் செரிமானத்திற்கு உண்டான நீர் சுரந்து செரிமானத்தை துரிதப்படுத்தும்.

ஒரு சிலருக்கு பசியே ஏற்படாது அவர்கள் ஏலக்காயை உண்டு வந்தால் பசி ஏற்படும். அடிக்கடி நெஞ்சு எரிச்சலால் அவதிபடுபவர்கள் ஏலக்காயை மென்று சாப்பிடலாம். வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வயிற்று சம்பந்தமான பிரச்சனைகளை கூட இந்த ஏலக்காய் சாப்பிட்டு வந்தால் சரியாகும்.

cardamom,medicinal properties,bad cholesterol,chest irritation ,ஏலக்காய், மருத்துவக்குணங்கள், கெட்ட கொழுப்பு, நெஞ்சு எரிச்சல்

ஒரு சிலருக்கு சளி ஏற்பட்டு நுரையீரல் முழுவதும் சளி கட்டி இருமலும் சேர்ந்து விடும். அப்படிப்பட்டவர்கள் ஏலக்காயை மென்று உண்டு வந்தால் சளியை இளக்கி வெளியேற்றிவிடும். இருமலும் குணமடைந்து விடும்.

ஒரு சிலருக்கு வயிற்றில் புண் இருந்தால் வாயில் துர்நாற்றம் வீசும். அப்படிப்பட்டவர்கள் ஏலக்காயை மென்று வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி, இதயம் நன்றாக துடிப்பதற்கு ஏலக்காய் உதவி செய்கிறது. ரத்த அழுத்த பிரச்சனையால் அவதிபடுபவர்கள் ஏலக்காயை மென்று உண்ணலாம்.

பல்வலி, ஈறுவீக்கம் இருப்போர்கள் ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரும்பொழுது பற்களில் உள்ள பிரச்சனைகளை நீக்கும்.

Tags :