Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையமாக இருக்கும் முந்திரி பருப்பு

ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையமாக இருக்கும் முந்திரி பருப்பு

By: Nagaraj Fri, 11 Nov 2022 4:54:38 PM

ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையமாக இருக்கும் முந்திரி பருப்பு

சென்னை: ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையமாக இருக்கும் முந்திரி பருப்பு பெரும்பாலும் இனிப்புகள் மற்றும் பாரம்பரிய உணவுகளில் சுவையை அதிகரிக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

முந்திரியில் ஃபைபர் , புரோட்டின் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. மேலும் முந்திரிகள் பல வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நன்மை பயக்கும் தாவர கலவைகளையும் கொண்டிருக்கின்றன. முந்திரிகளை எடுத்து கொள்வதால் கிடைக்கும் சில அற்பு நன்மைகளை பற்றி இப்போது பார்க்கலாம்.

முந்திரி பருப்புகள் நம் இதய ஆரோக்கியத்திற்கு தீமை என்று ஒரு கட்டுக்கதை உள்ளது. ஆனால் உண்மை என்னவெனில் முந்திரியில் இருக்கும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், பொட்டாசியம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL-ஐ குறைக்கவும், நல்ல கொலஸ்ட்ரால் எனப்படும் HDL-ஐ அதிகரிக்கவும் உதவுகிறது.

இதயத்தில் இருந்து கொழுப்பை உறிஞ்சி கல்லீரலுக்கு எடுத்துச் செல்வது HDL-ன் பொறுப்பு. இதய நோய் வருவதற்கான ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய இன்டர்னல் இன்ஃபளமேஷனை குறைக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் இதில் உள்ளன.

body weight,cashews,fiber,unnecessary hunger,reduce ,உடல் எடை, முந்திரி, நார்ச்சத்து, தேவையற்ற பசி, குறைக்கும்

முந்திரி பருப்பில் நிறைந்திருக்கும் காப்பர் உடலிலிருந்து ஃப்ரீ ரேடிக்கல்ஸை அகற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. காப்பர் குறைபாடு ரத்த சோகை போன்ற குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். எனவே நமது உணவில் பரிந்துரைக்கப்பட்ட அளவு தாமிரம் இருக்க வேண்டும். இதற்கு முந்திரி ஒரு சிறந்த உணவாக இருக்கிறது.

மேலும் இதில் உள்ள ஆரோக்கியமான நிறைவுறா கொழுப்புகள், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் எல்-அர்ஜினைன் போன்ற தாதுக்கள் ரத்த நாளங்களை விரிவுபடுத்துவதன் மூலம் ரத்த அழுத்தத்தை குறைக்க கணிசமாக உதவுகிறது.

முந்திரியில் இருக்கும் அதிக கலோரிகள், புரதங்கள் மற்றும் நார்ச்சத்துநம்மை நீண்ட நேரம் முழுமையாக உணர வைக்கும் மற்றும் தேவையற்ற பசியை குறைக்கும். எனினும் முந்திரியில் அதிக கலோரிகள் இருப்பதால் மிதமாக எடுத்து கொள்வது அவசியம். கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகளின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்த முந்திரி பருப்பில் உள்ள மெக்னீசியம் உதவுகிறது. இது உடல் எடையை குறைக்க மேலும் உதவும்.

எடையை கட்டுப்படுத்த உதவுகிறது : முந்திரியில் இருக்கும் அதிக கலோரிகள், புரதங்கள் மற்றும் நார்ச்சத்துநம்மை நீண்ட நேரம் முழுமையாக உணர வைக்கும் மற்றும் தேவையற்ற பசியை குறைக்கும். எனினும் முந்திரியில் அதிக கலோரிகள் இருப்பதால் மிதமாக எடுத்து கொள்வது அவசியம். கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகளின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்த முந்திரி பருப்பில் உள்ள மெக்னீசியம் உதவுகிறது. இது உடல் எடையை குறைக்க மேலும் உதவும்.

Tags :
|