Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ஊட்டச்சத்தும், மெக்னீசிய சத்தும் அதிகம் கொண்ட காலிஃப்ளவர்

ஊட்டச்சத்தும், மெக்னீசிய சத்தும் அதிகம் கொண்ட காலிஃப்ளவர்

By: Nagaraj Sat, 25 Nov 2023 1:20:40 PM

ஊட்டச்சத்தும், மெக்னீசிய சத்தும் அதிகம் கொண்ட காலிஃப்ளவர்

சென்னை: காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
காலிஃப்ளவர், பலரும் சொல்வதை போல இது பயமுறுத்தும் காய்கறி அல்ல. இது குறுக்குவெட்டு தோற்றம் உடைய காய் வகை. பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடண்ட் பொருட்களும் அடங்கிய காலிஃப்ளவர், உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய காயாகவே இருக்கிறது. இதன் ஆரோக்கியத் தன்மைகள் உடலில் பலவித நல்ல மாறுதல்களை ஏற்படுத்தக் கூடியவை.

காலிஃப்ளவரில் கொழுப்புத் தன்மை கிடையாது. ஆகையால் இந்த மலரான காய் வகையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை சமைப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டால், இதன் ஊட்டச்சத்து நீங்கி விடும் என்பதால், இதை ஐந்து நிமிடத்திற்கு மேல் சமைக்க வேண்டாம். சுவை அதிகம் உள்ள காலிஃப்ளவரை பலவிதங்களிலும் சமைக்க முடியும். மேலும் காலிஃப்ளவர் நம் அன்றாடும் சந்தையிலேயே கிடைக்கக் கூடியவை. ஆகவே அத்தகைய காலிஃப்ளவரை உணவில் சேர்த்து பயன் பெறுங்கள்.

காலிஃப்ளவரில் இரண்டு சக்தி வாய்ந்த வைட்டமின் சி-யும், மெக்னீசியமும் உள்ளது. இவை இரண்டும் உடலின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாகும். மேலும் ஊட்டச்சத்து அதிகம் கொண்ட காலிஃப்ளவரை, உணவில் சேர்த்துக் கொள்வதால், உடலை தாக்கும் புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் பல்வேறு தொற்று நோய் மற்றும் மன அழுத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும்.

காலிஃப்ளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும், வைட்டமின் கே சத்தும் நிறைந்துள்ளதால், இது உடலில் ஏற்படும் அழற்சியை நீக்குகின்றது. தினமும் இதை உணவில் சேர்த்துக் கொண்டால் கீல்வாதம், உடல் பருமன், நீரிழிவு நோய், அல்சரேட்டிவ் கொலிட்ஸ்(ulcerative colitis) மற்றும் குடல் பிரச்சனைகள் போன்ற அழற்சித் தரும் நோய்களை தடுக்க முடியும்.

toxicity,cancer,cauliflower,intestinal problems,inflammatory disease ,நச்சுத்தன்மை, புற்றுநோய், காலிபிளவர், குடல் பிரச்னைகள், அழற்சி தரும் நோய்

காலிஃப்ளவரில் சுகாதார நலன்களை அளிக்கும் குளுக்கோசினோலேட் என அழைக்கப்படும் பைட்டோ சத்துக்கள் பெரும் அளவில் உள்ளதால், உடலின் நச்சுத் தன்மையை நீக்கி, புற்றுநோய் போன்ற நோய்கள் நெருங்காமல் பார்த்துக் கொள்கின்றது.

ஆன்டி-ஆக்ஸிடண்ட் மற்றும் அழற்சி நீக்கும் காரணிகள் உள்ளதால், காலிஃப்ளவர் இதய நோய்களை தடுக்க உதவுகின்றது. இதில் அல்லிசின் அதிகமாக இருப்பதால், இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், பக்கவாதம் மற்றும் பல இதய கோளாறுகள் தீண்டாமல் காத்துக் கொள்ள முடியும்.

நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமானத்திற்கு உதவுகின்றது. ஒரு கப் காலிஃப்ளவருக்கு, சுமார் 3.35 அளவில் நார்சத்து உள்ளது. நார்சத்து உடலுக்கு மிகவும் தேவை. ஏனெனில் இவையே செரிமானத்தை சரி செய்கின்றது. எனவே காலிஃப்ளவரை உணவில் சேர்த்து, செரிமானத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்

Tags :
|