Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கர்ப்பப்பை தளர்வுக்கான காரணங்களும்... அதன் நிலைகளும்

கர்ப்பப்பை தளர்வுக்கான காரணங்களும்... அதன் நிலைகளும்

By: Nagaraj Mon, 20 Nov 2023 09:45:31 AM

கர்ப்பப்பை தளர்வுக்கான காரணங்களும்... அதன் நிலைகளும்

சென்னை: கருப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது. பிரசவத்தின் போது தசைகள் தளர்ந்து போயிருக்கும் போதுமான அளவு ஓய்வெடுக்காமல், வேலை செய்வது, எடை அதிகமுள்ள பொருட்களைத் தூக்குவது போன்றவற்றால் இடுப்பெலும்புத் தசைப் பகுதிகள் பலமிழக்கும்.

பெரும்பாலும் மெனோபாஸ் வயதில் தான் இது தன் வேலையைக் காட்டத் தொடங்கும் அந்தரங்க உறுப்பின் வழியே சதைப்பகுதி வெளியே வருகிற உணர்வு இருக்கும். அடிக்கடி முதுகு வலியும் இருக்கும். கர்ப்பப்பை இறக்கத்தில் 3 நிலைகள் உள்ளன. முதல் மற்றும் இரண்டாம் நிலைகளில், இறங்கிய கர்ப்பப்பை பகுதியை லேப்ராஸ்கோப்பி சிகிச்சை மூலம் இழுத்து வைத்து, டேப் மாதிரியான ஒன்றைப் பொருத்தி சரி செய்து விடலாம்.

weight lifting,women,uterus,treatment,remedy,primary ,எடை தூக்குவது, பெண்கள், கர்ப்பப்பை, சிகிச்சை, தீர்வு, முதல்நிலை

அது அதே நிலையிலேயே அடுத்த சில வருடங்களுக்கு இருக்கும். 3-வது நிலை இறக்கம் சற்றே சிக்கலானது. இந்தநிலையில் கர்ப்பப்பையானது வெளியே தொங்க ஆரம்பித்து விடும்.

சிறுநீர்பையும் மலப்பையும் சேர்ந்து அழுத்தப்பட்டு, அடிக்கடி சிறுநீர் கழிக்கிற உணர்வு, சிறுநீர் கழித்த பிறகும் மிச்சமிருக்கிற உணர்வு, தேங்கிப் போகிற சிறுநீரின் மூலம் இன்ஃபெக்ஷன் உண்டாகி சிறுநீரகங்களே பழுதடைவது போன்றவையும், மலச்சிக்கலும், மலம் கழித்த பிறகும் அதிருப்தியான உணர்வு போன்றவையும் சேர்ந்து கொள்ளும். ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகுவது நல்லது.

முதல் நிலை பாதிப்பாக இருப்பின் ஸ்லிங் எனப்படுகிற அறுவை சிகிச்சையின் மூலம் தீர்வு காண்பது, எடை தூக்குவது, கடினமான வேலைகளைச் செய்வது போன்றவற்றைத் தவிர்ப்பது, இவையெல்லாம் பிரச்சினை தீவிரமாகாமல் தடுக்கும் வழிகள்.

Tags :
|
|
|