Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை குழந்தைகளுக்கு தர வேண்டும்

மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை குழந்தைகளுக்கு தர வேண்டும்

By: Nagaraj Tue, 24 Jan 2023 10:42:06 PM

மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை குழந்தைகளுக்கு தர வேண்டும்

சென்னை: குழந்தைகள் நன்றாக படிப்பதற்கு அவர்களுக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது.

ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் மூளை நரம்புகள் வயது முதிர்ச்சியாலும், மன அழுத்தத்தினாலும் சோர்வடைவதயாகும். அதனால் மூளை சரியாக எதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாதநிலை ஏற்படுகிறது.

கர்ப்பக் காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும். அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும்.

intellect,nerves,memory,food,neuromuscular system ,அறிவுத்திறன், குழ்நதைகள், ஞாபகசக்தி, உணவுகள், நரம்புத்தசை மண்டலம்

கர்ப்பிணிகளாக இருக்கும்போதே ஆரம்பித்து, பிரசவசத்துக்குப் பின் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு தொடர்ந்தது. அதில் கர்ப்பத்தின்போது மீன்களை அதிகம் உணவில் சேர்த்துக் கொண்ட தாய்மாரின் குழந்தைகளின் புத்திக் கூர்மையும், அவர்களது கை மற்றும் கண் இணைந்து செயல்படுவதும், தகவல் தொடர்பும் மிகச் சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.

மூளை வளர்ச்சிக்கு முக்கியமான ஒமேகா-3 மீன்களில் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம். பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட உணவுகளில் அதிகமாக புரோட்டீன், கல்சியம், பொட்டாசியம் மற்றும் விற்றமின் “டி” உள்ளது. இவ்வளவு ஊட்டத்தை அளிக்கிற பாலானது, நரம்புத்தசை மண்டலத்தை நன்கு இயக்குவதோடு, மூளை செல்களையும் நன்கு செயற்பட வைக்கிறது.

மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் செல்களில் முக்கியமானது தான் ‘கோலைன்’ சத்து. இது முட்டையில் அதிகம் இருக்கிறது. இதில் உள்ள விட்டமின் ”டி” அறிவுத்திறனை அதிகரிக்கும்.

Tags :
|
|
|