Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • சீரக பானம் உங்கள் உடல் எடையை குறைக்கும்... தெரியுங்களா!!!

சீரக பானம் உங்கள் உடல் எடையை குறைக்கும்... தெரியுங்களா!!!

By: Nagaraj Sun, 31 May 2020 9:00:15 PM

சீரக பானம் உங்கள் உடல் எடையை குறைக்கும்... தெரியுங்களா!!!

லாக் டவுன் காலத்தில் எங்கும் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே வேலை பார்த்ததால் பலரும் உடல் எடை அதிகரித்து அவதிப்படுகின்றனர். எளிய முறையில் உங்கள் எடையை குறைக்க சீரகம் உதவுகிறது.

வீட்டில் சீரகத்தில் தயாரிக்கும் பானத்தினை பயன்படுத்தி இரவில் ஒரு முறை 7 நாள் குடித்தாலே போதும் உங்கள் உடல் எடை மிக விரைவாக குறையும். உடலை குறைக்க வேண்டும் என்று
நினைப்பவர்களுக்கு சீரகம் ஒரு அற்புதமான பொருளாகும் .

இரும்புச்சத்து இதில் அதிகமாக உள்ளது. ஹீமோகுளோபின் அளவை சரிசெய்கிறது. சுவாசக்குழாய்களில் உள்ள கிருமிகளை அகற்றுகிறது. இந்த பானம் தயாரிக்கும் முறை:

cumin,lemon,honey,mild,night ,சீரகம், எலுமிச்சை, தேன், மிதமானது, இரவு

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 1 தேக்கரண்டி சீரகம் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். அதன் பிறகு அந்த சாறுடன் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். மேலும் இதனுடன் 1 தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

இந்த சாற்றை இரவில் சாப்பிட்ட பின் அரைமணிநேரம் கழித்து மிதமான சூட்டில் குடிக்க வேண்டும். இந்த சாற்றை தொடர்ந்து 7 நாட்கள் குடித்து வந்தால் போதும் அந்த பலன் சீக்கிரமாக தெரிய வரும். கர்ப்பமாக இருப்பவர்கள் இந்த பானத்தை குடிக்கக்கூடாது.

Tags :
|
|
|
|