Advertisement

மது போதையை மறக்கச் செய்கிறது கொய்யாப்பழம்

By: Nagaraj Fri, 06 Nov 2020 10:03:17 PM

மது போதையை மறக்கச் செய்கிறது கொய்யாப்பழம்

மது போதையை விட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கைக் கொடுக்கும் ஒரு பழம் இருக்கு என்பது தெரியுங்களா? தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் மதுப்பிரியரா.? அன்றாடம் குடித்தால்தான் தூக்கம் வருமா? 'பாழாய்ப் போன இந்த சனியனை என்னால் விட்டொழிக்க முடியவில்லை' எனக் கவலைப் படுகிறீர்களா?தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வருங்கள்.

குடிப்பழக்கத்தை அடியோடு மறந்து விடலாம். கொய்யாப்பழத்தில் அப்படியொரு சக்தி இருக்கிறது.மது அருந்தும், ஆசை, வெறி எல்லாம் இல்லாமல் செய்து விடுகிறது இந்தக் கொய்யாப்பழம். பழங்களிலேயே விலை மலிவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமாக இருப்பது கொய்யாப்பழம்.

alcohol intoxication,forgetfulness,bile,cinnamon ,குடி போதை, மறக்கச்செய்யும், பித்தம், கொய்யாப்பழம்

இதில் வைட்டமின் 'பி' வைட்டமின் 'சி' கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் சிறந்த உணவாகும். உடலுக்கு வலு சேர்ப்பதோடு, எலும்புகளும் பலம் பெறும்.

கொய்யாப்பழம் தோல் வறட்சியை நீக்கி உடலுக்கு இளமை தருகிறது. மது போதைக்கு அடிமையானவர்கள் அப் பழக்கத்திலிருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இப்பழத்தை சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்போ அல்லது சாப்பிட்ட பின் ஒரு மணி நேரம் கழித்தோதான் சாப்பிட வேன்டும்.

இரவில் சாப்பிடக் கூடாது. நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப் பழத்தைச் சாப்பிடக் கூடாது. சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இதே போல் கொய்யாவை அளவோடு சாப்பிட வேண்டும். இல்லையெனில் பித்தம் ஏற்பட்டு வாந்தி, மயக்கம் ஏற்படும்.

Tags :
|