Advertisement

அசிடிட்டி பிரச்சனையை உடனே விரட்டும் கிராம்பு

By: Monisha Fri, 13 Nov 2020 10:59:24 AM

அசிடிட்டி பிரச்சனையை உடனே விரட்டும் கிராம்பு

நாம் எடுத்து கொள்ளும் உணவு வயிற்றுக்கு செல்கிறது. சாப்பிட்ட உணவு செரிப்பதற்கு வயிற்றில் உள்ள கேஸ்ட்ரிக் அமிலங்கள் உதவுகின்றன. வயிற்றில் உள்ள கேஸ்ட்ரிக் அமிலங்களில் இருந்து அளவுக்கு அதிகமான ஆசிட் வெளியேறுவதனால், அசிடிட்டி பாதிப்புகள் ஏற்படுகின்றன.

அசிடிட்டியால் வயிற்று எரிச்சல் ஏற்படும். தொடர்ந்து எண்ணெய் தன்மை கொண்ட, காரமான உணவுகளை எடுத்து கொள்வதினால் அசிடிட்டி பிரச்சனைகள் உண்டாகின்றன.

அசிடிட்டி பாதிப்புகளுக்கு பிற மருந்துகளை வாங்கி சாப்பிடுவதை விட நம்முடைய வீட்டில் கிடைக்கும் இயற்கையான மருந்துகளை சாப்பிடலாம். கிராம்பு, இலவங்கம், ஏலக்காய், மோர், ஆப்பிள் சிடர் வினிகர், சீரகம் ஆகிய பொருட்கள் அசிடிட்டி பாதிப்பை நீக்குகின்றன.

acidity,cloves,medicine,gastric acid,acid ,அசிடிட்டி,கிராம்பு,மருந்து,கேஸ்ட்ரிக் அமிலம்,ஆசிட்

செரிமானத்திற்கு கிராம்பு பயன்படுகிறது. உணவுகளில் கிராம்பு சேர்த்து கொள்வதினால், அசிடிட்டி பிரச்சனை ஏற்படுவதை தடுக்கின்றன. சம அளவு ஏலக்காய், கிராம்பு சேர்த்து சாப்பிட்டால், அசிடிட்டி பிரச்சனைகள் ஏற்படாது.

நெஞ்சு எரிச்சல் பிரச்சனைகளுக்கு கிராம்பு சாப்பிடலாம். உணவுகளில் கிராம்பு சேர்த்து கொள்வதினால், உணவு செரிமானம் ஏற்படுகின்றன.

அசிடிட்டி பிரச்சனைகள் இருந்தால், இரண்டு அல்லது மூன்று கிராம்பை மெல்ல வேண்டும். இதனால், அசிடிட்டி பிரச்சனைகளுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். தினசரி உணவுகளில், குழம்பு வகைகளில், கிராம்பு சேர்த்து கொள்ள வேண்டும். இதனால், வயிற்று பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

Tags :
|