Advertisement

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு கொத்தவரங்காய்

By: Nagaraj Wed, 19 July 2023 9:10:31 PM

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு கொத்தவரங்காய்

சென்னை: கொத்தவரங்காயில் 3.7 கிராம் நார்ச்சத்து மற்றும் 3 கிராம் புரதம் இருக்கிறது. இதில் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது. கொத்தவரங்காய் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு குறையும் என்பது உண்மைதான். கொத்தவரங்காயில் நார்ச்சத்து மிக அதிகமாக இருப்பதோடு, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், இரும்பு சத்து, போலேட் ஆகியவையும் அதிகமாக இருக்கிறது.
100 கிராம் கொத்தவரங்காயில் 35 கலோரிகள் தான் இருக்கிறது. மேலும் இதில் 3.7 கிராம் நார்ச்சத்து மற்றும் 3 கிராம் புரதம் இருக்கிறது. இதன் சர்க்கரை உயர்தல் குறியீடு (கிளைசிமிக்ஸ் இன்டெக்ஸ் ) மிகக் குறைவு என்பதால் நீரிழிவு நோயாளிகள் இதனை தயக்கமின்றி சாப்பிடலாம். இதன் விதைகளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, குடலில் உள்ள நன்மை தரக்கூடிய பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவித்து குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

coriander,diabetes,diet,digestive problems,fiber ,உணவு, கொத்தவரங்காய், செரிமான பிரச்னை, நார்ச்சத்து, நீரிழிவு

இது ரத்தத்தில் எல்.டி.எல். எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. மேலும், இது பித்தப்பையில் உள்ள கற்களை கரைக்கக்கூடிய திறன் படைத்தது. இதையும் படியுங்கள்: நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்… இதில் உள்ள பைட்டோநியூட்ரியன்ட்ஸ் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கிறது. போலேட் மற்றும் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் கருவுற்றிருக்கும் பெண்கள் இதை தாராளமாக சாப்பிடலாம்.

இத்தகைய நன்மைகளைப் பெற்றிருக்கும் கொத்தவரங்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக கருதப்படுகிறது. இதில் நார்ச்சத்து மிக அதிகமாக இருப்பதால் உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ளும்போது வயிறு சம்பந்தப்பட்ட செரிமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Tags :
|