Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் கொத்தமல்லி இலைச்சாறு

உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் கொத்தமல்லி இலைச்சாறு

By: Nagaraj Sun, 20 Dec 2020 6:01:46 PM

உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் கொத்தமல்லி இலைச்சாறு

இன்றுள்ள உணவு முறைகளில் பெரும்பாலனவை நமது உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையிலேயே இருக்கிறது. இரத்தத்தை சுத்திகரித்து, கழிவுகளை வெளியேற்றி உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் கொத்தமல்லி இலைச்சாறு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

கொத்துமல்லி இலை - கால் கட்டு,
தேங்காய் - 1 ,
நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு.

coriander leaf juice,health,bile,liver ,கொத்தமல்லி இலைசாறு, ஆரோக்கியம், பித்தம், கல்லீரல்

செய்முறை: எடுத்துக்கொண்ட கொத்தமல்லி இலையை சுத்தம் செய்து, தேங்காயுடன் அரைத்து வடிகட்ட வேண்டும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து குடிக்கலாம். இதனை அடுப்பில் வைத்து சூடாக்கி உபயோகம் செய்ய கூடாது.

கொத்தமல்லி இலைசாயுடன் எலுமிச்சை சாறு, உப்பு, மிளகு சேர்த்தும் குடிக்கலாம். மோர் மற்றும் உப்பு சேர்த்தும் குடிக்கலாம்.

நன்மைகள்:
கொத்தமல்லி இலைசாறை பருகி வந்தால் மஞ்சள் காமாலை, கேன்சர் போன்ற நோய்கள் குணமாகும். உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகள் நீங்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் குணமாகும். கல்லீரல் பலமாகும். பித்தம் கட்டுக்குள் இருக்கும். தினமும் தேநீருக்கு பதிலாக கூட இதனை அருந்தி வரலாம்.

குறிப்பு:
கொத்தமல்லி இலைசாறை குடிக்கும் நாட்களில், பசிக்கும் நேரங்களில் மட்டுமே சாப்பிட வேண்டும்.

Tags :
|
|