Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உடல் எடையை குறைக்க உதவும் நார்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காய்

உடல் எடையை குறைக்க உதவும் நார்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காய்

By: Nagaraj Fri, 14 Apr 2023 11:58:32 PM

உடல் எடையை குறைக்க உதவும் நார்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காய்

சென்னை: காய்கறிகளிலேயே அனைவருக்கும் மிகவும் பிடித்த காய் வெள்ளரிக்காய். இந்த வெள்ளரிக்காயில் பல நன்மைகள் நிறைந்துள்ளன. மேலும், வெள்ளரிக்காய் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.

உங்கள் உடலுக்குத் தேவையான உயிர் கொடுக்கும் திரவமாக நீர் கருதப்படுகிறது. உடலில் தேவையான அளவை விட குறைவான நீர் இருப்பு நீரிழப்புக்கு காரணமாகிறது, இதனால் நீங்கள் பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். தினமும் வெள்ளக்காயை சாப்பிட்டு வந்தால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

cucumber,skeletal muscles,calcium,helps,body weight ,வெள்ளரிக்காய், எலும்பு தசைகள், கால்சியம், உதவி செய்யும், உடல் எடை

தினமும் ஒரு வெள்ளக்கரிக்காயை சாப்பிட்டு வந்தால், உங்கள் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள முடியும். வெள்ளரிக்காயில் கலோரிகள் குறைவாக உள்ளன. நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அதிகமாக இருப்பதால், உடல் எடை கிடுகிடுவென குறைய உதவி செய்யும்.

மலச்சிக்கலால் அவதிப்பட்டு வருபவர்கள் தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினையை போக்கி விடும். மேலும், நமது குடல் இயக்கங்களை சீராக்க வைத்துக் கொள்ள வெள்ளரிக்காய் வழிவகை செய்யும்.வெள்ளரிக்காயில் உள்ள கால்சியம், நமது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். எலும்பு முறிவுகளின் அபாயங்களை நீக்கும். வெள்ளரிக்காய்யில் உள்ள கால்சியம் எலும்பு தசைகளை சரியாக இயங்க உதவி செய்யும்.

Tags :
|