Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் சீரக நீர்... அஜீரணத்தையும் போக்குகிறது

ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் சீரக நீர்... அஜீரணத்தையும் போக்குகிறது

By: Nagaraj Fri, 12 Aug 2022 10:00:56 PM

ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் சீரக நீர்... அஜீரணத்தையும் போக்குகிறது

சென்னை: அஜீரணத்தை போக்க உதவுகிறது... சீரக நீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். சீரக நீர் வீக்கம் மற்றும் அஜீரணத்தை போக்க உதவுகிறது.

சமையலறையில் இருக்கும் சீரகம், உணவுக்கு அற்புதமான சுவையைத் தருவது மட்டுமல்லாமல், ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. ஒரு மசாலாப் பொருளாக மட்டும் இதனை பார்க்கக் கூடாது. சீரக நீரை குடிப்பதால் ஏராளமான நன்மைகள் ஒருவருக்கு கிடைக்கும். சீரக நீர் வீக்கம் மற்றும் அஜீரணத்தை போக்க உதவுகிறது. குறிப்பாக, வயிற்று வலியை குணப்படுத்தும்.

கர்ப்ப காலத்தில் வயிற்று பிரச்சனைகள், வயிற்று வலி, மலச்சிக்கல், சளி போன்ற சில பிரச்சனைகளை சீரகம் போக்குகிறது. மேலும், சீரகம் இரும்புச்சத்துக்கான நல்ல மூலமாகும். எனவே கர்ப்ப காலத்தில் சீரகம் அல்லது சீரகம் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டலை போக்க சீரகத்தை உட்கொள்ளலாம். மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு உட்கொள்ள வேண்டும்.

diabetes,risk,cumin water,skin problems,will not come ,நீரிழிவு நோய், அபாயம், சீரகத்தண்ணீர, சரும பிரச்னைகள், வராது

சீரக நீர் பாலூட்டி சுரப்பிகளுக்கு நல்லது. எனவே இது கர்ப்பிணிப் பெண்களுக்கு பாலூட்டுவதை ஊக்குவிக்கிறது. சீரக விதைகள் இரும்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்த பொக்கிஷம். நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதன் மூலம் பல நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. சீரகத்தை உட்கொள்வதால் நோய்வாய்ப்படும் வாய்ப்புகளை குறைக்கிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு சீரக நீர் நல்லது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க வெறும் வயிற்றில் குடிக்கலாம். சீரகம் உடலில் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

சீரகத் தண்ணீரைக் குடிப்பதால், கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்து, ரத்த ஓட்டம் சீராகும். காய்ச்சல் வந்தால் சீரகத் தண்ணீரைக் குடித்துவர, உடலில் சளியை உற்பத்தி செய்து நிவாரணம் தரும். தினமும் காலையில் சீரகம் தண்ணீர் குடிப்பதால் அசிடிட்டி பிரச்சனை வராது

சீரக நீர் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி சரும பிரச்சனைகளை ஏற்படுத்தாது. எடை இழப்புக்கு சீரகத் தண்ணீரைக் குடிக்க அறிவுறுத்தப்படுகிறது. சீரகத் தண்ணீரைக் குடிப்பதால், உடலில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும், இதனால் நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.

Tags :
|