Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நமக்கு நன்மை தரும் கறிவேப்பிலை

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நமக்கு நன்மை தரும் கறிவேப்பிலை

By: vaithegi Tue, 13 Dec 2022 10:37:48 AM

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நமக்கு நன்மை தரும் கறிவேப்பிலை

கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, மற்றும் விட்டமின் சி, விட்டமின் ஏ, விட்டமின் பி, விட்டமின் இ, போன்ற சத்துகளும் விட்டமின்களும் நிறைந்து காணப்படுகிறது.

கறிவேப்பிலையின் நன்மைகளை ஒரு புத்தகமே எழுதலாம். அதனால்தான் என்னவோ நம் தினசரி சமையலில் கறிவேப்பிலை கட்டாயம் இடம் பெறுகிறது.இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படும் பிரச்சனைகளில் தலைமுடி பிரச்சனையும் ஒன்று. முடி கொட்டுதல், இளம் வயதில் நரை முடி, வழுக்கை, முடி உடைதல் என தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் பலவற்றை அனுபவிக்கின்றனர். அதற்கு கறிவேப்பிலையில் சிறந்த மருத்துவம் இருக்கிறது.

நரை முடி மற்றும் முடி உதிர்வு பிரச்சனைக்கு: தேங்காய் எண்ணெய் 1-2 கப் எடுத்துக்கொள்ளுங்கள். பின் கையளவு கறிவேப்பிலை எடுத்துக்கொள்ளுங்கள்.இதோடு ஒரு நெல்லிக்காய் இருந்தால் சேர்க்கலாம். இல்லையெனில் கறிவேப்பிலை மட்டுமே போதுமானது.

curry leaves,good ,கறிவேப்பிலை,நன்மை

இவை 2-யும் நன்கு சிறு தீயில் வைத்து கொதிக்கவிடுங்கள். எண்ணெய் நிறம் மாறும் வரை கொதிக்க வேண்டும். கறிவேப்பிலை கருமையாக மாற வேண்டும். நன்கு கொதித்ததும் அதை ஆற வைத்து பின் வடிகட்டிக்கொள்ளுங்கள்.பிறகு தலைமுடியை ஒவ்வொரு பகுதியாக எடுத்து வேர்களில் படும்படி தடவி நன்கு மசாஜ் செய்து ஊற வைக்கவும். இரவு முழுவதும் ஊற வைத்து மறு நாள் காலையில் ஷாம்பூ பயன்படுத்தி தலைக்கு குளித்துவிடுங்கள். இப்படி வாரம் ஒரு முறை செய்து வர முடி கொட்டுவது குறையும்.

பொடுகு தொல்லை மற்றும் பேன் இருந்தால் தலைமுடிக்கு தேவையான கறிவேப்பிலையை மோர் ஊற்றி பேஸ்ட் பதத்தில் மைய அரைக்க வேண்டும். பின் அதை வேர்களில் படும்படு தடவி காய்ந்து கொட்டும் வரை ஊற வைக்க வேண்டும். பின் தண்ணீர் அலசிவிட வேண்டும். இப்படி வாரம் 1 அல்லது 2 முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

Tags :