Advertisement

உடல் எடையைக் குறைக்க உதவும் கறிவேப்பிலை!!

By: Monisha Tue, 28 July 2020 3:56:14 PM

உடல்  எடையைக் குறைக்க உதவும் கறிவேப்பிலை!!

உணவில் அன்றாடம் தாளிப்பதற்கு பயன்படுத்தும் ஓர் பொருள் தான் கறிவேப்பிலை. அத்தகைய கறிவேப்பிலையை நம்மில் பலர் தூக்கி எறிவோம். ஆனால் கறிவேப்பிலை சாப்பிட்டால் நாம் உடலில் பல நன்மைகளை பெறலாம்.

கறிவேப்பிலை உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும். ஆகவே கறிவேப்பிலையை தூக்கி எறியாமல் தினமும் சாப்பிடுங்கள். ஆயுர்வேத மருத்துவத்திலும் உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு கறிவேப்பிலை பரிந்துரைக்கப்படுகிறது. அதற்கு அந்த கறிவேப்பிலையை பச்சையாகவோ அல்லது ஜூஸ் வடிவிலோ எடுத்துகொள்ளலாம்.

கறிவேப்பிலை செரிமான பிரச்சனைகளைப் போக்கும். செரிமான பிரச்சனைகள் இருந்தால் தான், உணவுகள் செரிமானமாகாமல் அதில் உள்ள கொழுப்புக்கள் அப்படியே வயிற்றில் படிந்து, தொப்பையை உருவாக்கி உடல் எடையை அதிகரிக்கும். எனவே செரிமான பிரச்சனைகள் வந்தால், காலையில் கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சிறிது உட்கொண்டு வாருங்கள். இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடை வேகமாக குறையும்.

curry leaves,body weight,metabolism,fat,belly ,கறிவேப்பிலை,உடல் எடை,மெட்டபாலிசம்,கொழுப்பு,தொப்பை

கறிவேப்பிலை உடலை சுத்தம் செய்து, உடலில் உள்ள நச்சுமிக்க பொருட்களை வெளியேற்றும். உடலில் இருந்து நச்சுக்கள் அவ்வப்போது வெளியேற்றப்பட்டுவிட்டால், உடல் பருமன் ஏற்படாது. ஆகவே தினமும் சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.

பச்சை கறிவேப்பிலையில் கெட்ட கொழுப்புக்களை எரிக்கும் பொருள் அதிகம் உள்ளது. ஆகவே உங்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பின், கறிவேப்பிலையை காலையில் எழுந்ததும் சிறிது உட்கொண்டு வருவது நல்ல பலனை தரும். கறிவேப்பிலை சாப்பிட்டால் உடல் எடை வேகமாக குறைவதோடு, அது உடலில் உள்ள ட்ரைகிளிசரைடு மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்க உதவுகிறதாம்.

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலையை வாயில் போட்டு மென்று விழுங்கலாம் அல்லது ஒரு கையளவு கறிவேப்பிலையை எடுத்து நன்கு மென்மையாக அரைத்து, ஒரு டம்ளர் நீரில் கலந்து, தேன் சேர்த்து குடித்து வரலாம். இதனால் உடல் எடை குறைவதை காணலாம்.

Tags :
|