Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • செயற்கை நகைகளால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகள்

செயற்கை நகைகளால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகள்

By: Karunakaran Tue, 20 Oct 2020 12:35:33 PM

செயற்கை நகைகளால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகள்

எல்லாவிதமான நகைகளும் எல்லோருடைய சருமத்திற்கும் ஒத்துக்கொள்ளாது. குறிப்பாக செயற்கை நகைகள் பலருடைய சருமத்திற்கு பொருந்தாது. சில காதணிகள் அல்லது கழுத்தில் அணியும் ஆபரணங்கள் சருமத்தில் அரிப்பு, எரிச்சலை ஏற்படுத்தும். சொறி பிரச்சினையும், சருமத்தில் தழும்புகள், திட்டுகள், சிவப்பு நிறத்தில் கட்டிகள் போன்றவையும் தோன்றக்கூடும். அணியும் ஆபரணங்களில் வெள்ளி போல் வெண்மை நிறம் கொண்ட கனிமமான நிக்கல் சேர்க்கப்பட்டிருப்பது ஒவ்வாமை ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம்.

நிக்கல் நேரடியாக சருமத்துடன் தொடர்பில் இருப்பதை தவிர்க்க வேண்டும். புதிதாக நகை அணிந்ததும் 12 முதல் 48 மணி நேரத்திற்குள் ‘நகை ஒவ்வாமை’ பிரச்சினைக்கான அறிகுறிகளை கண்டறிய முடியும். நிக்கல் சேர்க்கப்பட்ட ஆப ரணங்களை அணிவதால் ஒவ்வாமை ஏற்படுவது உறுதியானால் அத்தகைய ஆபரணங்களை தவிர்த்துவிட வேண்டும். அதற்கு மாற்றாக ‘லெதர்’, பிளாஸ்டிக்கில் தயாராகும் ஆப ரணங்களை உபயோகிக்கலாம். உலோகத்துக்கு மாற்றாக பிளாஸ்டிக் அல்லது லெதர் பொருட்களை பயன்படுத்துவது சருமத்திற்கு நலம் சேர்க்கும்.

damage,skin,synthetic jewelry,womens ,சேதம், தோல், செயற்கை நகைகள், பெண்கள்

ஆபரணங்கள் அணியும் பகுதியில் ஒவ்வாமை பிரச்சினை ஏற்பட்டால் ஈரப்பதமான மாய்ஸ்சரைசர் அல்லது லோஷன்களை உபயோகிக்கலாம். சருமத்தில் சொறி, அரிப்புகளை நீக்கவும், உலர்ந்த சரும திட்டுக்களை ஈரப்பதமாக வைத்திருக்கவும் ‘காலமைன் லோஷனை’ பயன்படுத்தலாம். சரும ஒவ்வாமை சார்ந்த பாதிப்புகளுக்கு கற்றாழை அருமருந்து. அதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் எத்தகைய சரும பிரச்சினைகளையும் குணப்படுத்தும் சக்தியை கொண்டுள்ளன. சாக்லெட், நட்ஸ் போன்ற உணவுப்பொருட்களில் நிக்கலை உள்ளடக்கிய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. மிகவும் மென்மையான உணர்திறன் கொண்ட சருமம் உடையவராக இருந்தால் இத்தகைய உணவு பொருட்களை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

மோதிரங்கள், கம்மல்கள், வளையல்கள், நெக்லஸ்கள் போன்ற கவரிங் நகைகளை சிறிது நேரம் அணிந்தாலே ஒவ்வாமை பாதிப்பை எதிர்கொண்டால் கூடுமானவரை அவற்றை அணிவதை தவிர்க்க வேண்டும். அவற்றுக்கு மாற்றாக பிளாட்டினம் போன்ற குறைவான எதிர்வினை புரியும் உலோகத்தை உபயோகிக்கலாம். ஆரம்பத்திலேயே ஒவ்வாமை பாதிப்பை கண்டறிந்துவிட்டால் விரைவாக குணப்படுத்திவிட முடியும். இல்லாவிட்டால் சீழ் நிறைந்த கொப்பளங்களாக மாறக்கூடும்.

Tags :
|
|