Advertisement

சோடா குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள்!

By: Monisha Sun, 01 Nov 2020 4:12:27 PM

சோடா குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள்!

அஜீரண கோளாறு ஏற்பட்டால் சோடா குடித்தால் சரியாகும் என்று அனைவருமே சோடா குடிப்பது வழக்கம். அஜீரண கோளாறு எப்படி வருகிறது என்று பார்த்தால் நாம் சாப்பிடும் உணவானது வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிடாமல் இருக்கும் போது செரிமான கோளாறு ஏற்படுகிறது.

இந்த பதிவில் சோடாவை குடிப்பதால் என்னென்ன ஆபத்துகள் நிகழ்கின்றது மற்றும் இது உடலுக்கு நல்லதா? என்பதை தெரிந்து கொள்வோம்.

அடிக்கடி சோடா குடிப்பதால், சோடாவிலுள்ள மூலப்பொருட்களால் நரம்பு மண்டலம் விரைவில் பலமிழந்து போய்விடுகிறது. இதனால் நரம்பு தளர்ச்சி உருவாகும் வாய்ப்புகள் அதிகம். சோடா அடிக்கடி குடிப்பதால் கிட்னி சேதமடையும்.

சோடா அடிக்கடி குடிப்பதால் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. ஏனெனில் இதில் சர்க்கரை அதிகமாக உள்ளது. உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் இடுப்பு சுற்றளவு பெருக்கம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகிறது.

soda,indigestion,high blood pressure,cholesterol,chemical ,சோடா,அஜீரண கோளாறு,உயர் இரத்த அழுத்தம்,கொழுப்பு,கெமிக்கல்

சோடாவில் இருக்கும் அமிலம் பற்களில் இருக்கும் எனாமலை நீக்கிவிடும் மட்டுமல்லாது இவற்றில் இருக்கும் பாஸ்போரிக் அமிலம் எலும்புகளில் இருக்கும் கால்சியம் சத்தை தளர செய்திடும்.

சோடாவின் வண்ணத்திற்காக இதில் பல கெமிக்கல் சேர்க்கப்படுகிறது. இந்த கெமிக்கல் குடல் மற்றும் கல்லீரல் புற்றுநோய் அதோடு தைராய்டு போன்ற நோய்களை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது.

சோடா குடிப்பதால் ஞாபக மறதி, மந்தத்தன்மை, வாய் குழறுதல் போன்றவை உண்டாக வாய்ப்புகள் உண்டு. சோடா பாட்டில்களில் மற்றும் கேன்களில் எண்டோக்ரைன் கோட்டிங் கொடுக்கப்பட்டிருக்கும். இதனால் மூச்சு பிரச்சனையிலிருந்து இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.

Tags :
|