Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • வயிற்று புற்றுநோயைக் குணப்படுத்தக்கூடிய பேரீச்சம் பழம்

வயிற்று புற்றுநோயைக் குணப்படுத்தக்கூடிய பேரீச்சம் பழம்

By: Nagaraj Fri, 14 July 2023 5:44:46 PM

வயிற்று புற்றுநோயைக் குணப்படுத்தக்கூடிய பேரீச்சம் பழம்

சென்னை: உடலுக்கு ஊட்டம் அளிக்கும் சிறப்பானது பேரீச்சம் பழம். இதில் உள்ள சத்துக்கள் வயிற்று புற்றுநோயைக் குணப்படுத்தக்கூடியது என ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

நாள் ஒன்றுக்கு மூன்று பேரீச்சம்பழங்களாவது சாப்பிட வேண்டும்’ என்று சிலர் கூறுவதை நாம் கேட்டிருப்போம். காரணம், அந்த மூன்று பேரீச்சையே நமக்கு அதிக ஆற்றலைத் தரக்கூடியது. பேரீச்சம்பழம் ரத்தசோகையைப் போக்குவதற்கும், முடி உதிர்வைத் தடுப்பதற்கும் உதவக்கூடியது. அதோடு, ஏராளமான பலன்களையும் அளிக்கக்கூடியது.

இதில், கால்சியம், சல்ஃபர், இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், காப்பர் மற்றும் மக்னீசியம் போன்ற கனிமங்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு உறுதி அளிக்கக்கூடிய ரிபோஃப்ளாவின், நியாசின், ஃபோலேட், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே போன்ற அனைத்துச் சத்துக்களும் கொண்ட ஒரே பழம் பேரீச்சம்பழம்தான்.

dates,stomach cancer,cure,benefits ,பேரீச்சம் பழம், வயிற்று புற்றுநோய், குணமாக்கும், நன்மைகள்

பேரீச்சம்பழத்தைச் சாப்பிட்டால், மலச்சிக்கல் ஏற்படும்’ என்கிற பொதுவான கருத்து ஒன்று உண்டு. அது உண்மை அல்ல. மலமிளக்கி உணவுகளில் ஒன்றாக இதனைச் சேர்த்துள்ளனர் நம் முன்னோர். மலச்சிக்கலைப் போக்க, முதல் நாள் இரவு மூன்று பேரீச்சம்பழங்களை தண்ணீரில் ஊறவைத்துவிட வேண்டும். காலையில் இந்தப் பேரீச்சம்பழச் சாற்றைப் பருகலாம். கரையக்கூடிய நார்ச்சத்து இதில் நிறைந்துள்ளதால், குடல் இயக்கங்கள் ஆரோக்கியமாக இருக்கும்; மலச்சிக்கலும் நீங்கும்.

செலினியம், மாங்கனீஸ், தாமிரம், மற்றும் மக்னீசியம் போன்றவை பேரீச்சம்பழத்தில் நிறைந்துள்ளதால், எலும்புகளின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் துணைபுரியும். அத்துடன் ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட எலும்பு தொடர்பான நோய்களில் இருந்து பாதுகாக்கும். குறிப்பாக, எலும்பு தேய்மானத்தால் பெரிதும் அவதிப்படும் வயதானவர்கள் இதைச் சாப்பிடுவது நல்லது.

பேரீச்சம்பழத்தில் இருக்கும் நிகோட்டின் அளவு குடலில் இருக்கும் நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்து, குடல் கோளாறுகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கும். இதில் அமினோ அமிலம், கரையாத மற்றும் கரையக்கூடிய நார்சத்து நிறைந்துள்ளதால் செரிமானக் கோளாறுகளைச் சீராக்கும்.

பேரீச்சம்பழம் வயிற்று புற்றுநோயைக் குணப்படுத்தக்கூடியது’ என்பது சில ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. இத்தனை நன்மைகளை அள்ளித்தரக்கூடிய பேரீச்சம்பழத்தை தரமானதாகப் பார்த்து வாங்கி, சாப்பிட வேண்டும். உண்பதற்கு முன்னர் நன்கு கழுவி, சுத்தம் செய்ய வேண்டும். மொத்தத்தில் இது நம் ஆரோக்கியத்துக்கு உதவும் அதிசயம்!

Tags :
|
|