Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • இனிப்புகளில் ஒட்டப்பட்டு இருக்கும் சில்வர் தாள்களால் ஏற்படும் தீமைகள்

இனிப்புகளில் ஒட்டப்பட்டு இருக்கும் சில்வர் தாள்களால் ஏற்படும் தீமைகள்

By: Nagaraj Sat, 17 Dec 2022 9:56:55 PM

இனிப்புகளில் ஒட்டப்பட்டு இருக்கும் சில்வர் தாள்களால் ஏற்படும் தீமைகள்

சென்னை: பொதுவாக இனிப்பு வகைகளில் சில்வர் தாள்கள் ஒட்டப்பட்டிருப்பதை பார்த்திருப்போம்.

இனிப்புகளில் ஒட்டப்பட்டிருக்கும் இந்த தாள்களை பெரும்பாலும் பிரிக்க முடியாது, அப்படியே தான் சாப்பிடுவோம். ஆனால் இது எதிலிருந்து தயாராகிறது என்று உங்களுக்கு தெரியுமா? இதனால் ஏற்படும் ஆபத்துகள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

குறித்த சில்வர் தாள்களின் பெயர் “வராக்”. இந்த ஜரிகை தாள் மாட்டின் குடல் கொண்டு தான் தயாரிக்கப்படுகிறது. இறைச்சிக்காக மாட்டை கொன்றவுடன் அதன் குடல் பகுதியை மட்டும் தனியாக எடுத்து, அதிலுள்ள ரத்தம் மற்றும் மலம் போன்ற கழிவுகளை சுத்தம் செய்து குடலை தனியாக எடுத்து விடுவார்கள்.

இதனை நீளாக வெட்டினால் 540 இன்ச் 10இன்ச் என விரியும், வராக் தயாரிக்க குடலை 60 துண்டுகளாக வெட்டி ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைப்பார்கள்.

desserts,germs,eggs of worms,need awareness ,இனிப்பு வகை, கிருமிகள், புழுக்களின் முட்டைகள், விழிப்புணர்வு தேவை

அதன்பின்னர் மெலிசான வெள்ளி தகட்டை, வெட்டப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடலுக்கு இடையில் வைத்து மொத்தத்தையும் ஒரு தோல் பையில் வைத்து இறுக்கிக் கட்டுவார்கள். இந்த தோல் மூட்டையை 1 அல்லது 2 நாள் வரை விடாது அடிப்பார்கள். இப்படி அடித்து, அடித்து அந்த வெள்ளி தகட்டை மெல்லிய தாள்களாக மாற்றுவார்கள்.

பிறகு அதை தோல் பையிலிருந்து எடுத்து, குடல்களை நீக்கி, வெள்ளி தாள்களை அடுக்கி வைப்பார்கள். இப்படி தொடர்ந்து அ.டி.ப்பதினால் அது மிக மெல்லிய வெள்ளி தாளாக மாறுகின்றது.

இப்படி தயாரிக்கப்பட்ட வெள்ளி சரிகை தாள்கள் மொத்தமாக ஸ்வீட் தயாரிப்பாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையே இனிப்புகளின் மேல் தயாரிப்பாளர்கள் பயன்படுத்துகின்றனர்.

மாட்டின் குடல்களில் உள்ள திசுக்கள், கிருமிகள், குடல்புழுக்கள் ஆபத்தானவை என்பதால் இந்த வராக் சுற்றப்பட்ட ஸ்வீட்டை வாங்கிச் சாப்பிடும் போது நமக்கு தெரியாமலேயே, மாட்டு குடல்களில் உள்ள கிருமிகள் மற்றும் குடல் புழுக்களின் முட்டைகள் வயிற்றுக்குள் செல்ல நேரிடலாம். எனவே இதுகுறித்து விழிப்புணர்வு தேவை.

Tags :
|