Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ஆஃப்ரிக்கன் கெளுத்தி மீனை சாப்பிடாதீங்க... உடல் ஆரோக்கியத்தை பாதிக்குமாம்!!!

ஆஃப்ரிக்கன் கெளுத்தி மீனை சாப்பிடாதீங்க... உடல் ஆரோக்கியத்தை பாதிக்குமாம்!!!

By: Nagaraj Mon, 13 June 2022 11:12:15 AM

ஆஃப்ரிக்கன் கெளுத்தி மீனை சாப்பிடாதீங்க... உடல் ஆரோக்கியத்தை பாதிக்குமாம்!!!

புதுடில்லி: தேளி விரால் சாப்பிடாதீங்க... இந்திய அரசால தடை செய்யப்பட்ட ஆண்மை குறைபாடு மற்றும் புற்றுநோயை ஊக்குவிக்கக்கூடிய தேளிவிரால் எனும் மீன் இன்றும் மார்கெட்டில் விற்பனை செய்யப்பட்டுதான் வருகிறது. இந்த மீனை மொய்மீன், பூ விரால் எனவும் சில ஊர்களில் கூறுவார்கள்.

உண்மையில் இந்த மீன் ஆஃப்ரிக்கன் கெளுத்தி எனும் வகையை சேர்ந்தது எனக்கூறப்படுகிறது. ஆசிய நாடுகளுக்குள் பரவி அஸ்ஸாம் பிரம்மபுத்திரா ஆற்றின் வழியாக இந்தியாவிற்கு வந்தாகவும் கூறப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் பெரிய அளவில் இல்லாமல் இருந்த இந்த மீன் வகையை அமெரிக்க தனியார் நிறுவனம் ஒன்று இந்தியாவில் வளர்க்க அனுமதி பெற்று நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மீன் பண்ணைகள் அமைத்துக்கொடுத்து விற்பனை செய்து வந்தது.

skin diseases,impotence,cancer,poultry,fish ,தோல் நோய்கள், ஆண்மைக்குறைவு, புற்றுநோய், கோழி இறைச்சி, மீன்

இதனை தொடர்ந்து இந்த மீன் வளர்ப்பை தடை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டு அதற்கு தடையும் விதிக்கப்பட்டது.இருப்பினும், தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்த மீன் வகை இன்றும் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டுதான் வருகிறது.

அசைவம் மட்டுமே உண்டு வாழும் இந்த மீனுக்கு கோழி இறைச்சியின் கழிவுகள் கொட்டப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்த மீன் சாப்பிடுவோருக்கு பல விதமான தோல் நோய்கள், ஆண்மைக்குறைவு,புற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

Tags :
|