Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • இந்த உணவுகளை மீண்டும் சூடுப்படுத்தி சாப்பிடாதீங்க: சாப்பிடவே சாப்பிடாதீங்க!!!

இந்த உணவுகளை மீண்டும் சூடுப்படுத்தி சாப்பிடாதீங்க: சாப்பிடவே சாப்பிடாதீங்க!!!

By: Nagaraj Sat, 18 Mar 2023 10:54:41 PM

இந்த உணவுகளை மீண்டும் சூடுப்படுத்தி சாப்பிடாதீங்க: சாப்பிடவே சாப்பிடாதீங்க!!!

சென்னை: எந்தெந்த உணவுகளை மீண்டும் சூடுப்படுத்தி சாப்பிடக்கூடாது என்பது தெரியுங்களா. தெரிந்து கொண்டு உடல் ஆரோக்கியத்தை உயர்த்திக் கொள்ளுங்கள்.

உலகம் முழுவதும் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை எதிர்கொள்ள உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையான முறையில் வளர்த்துக் கொள்வதும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதும் மட்டுமே சரியான வழி.

இன்றைய காலகட்டத்தில் மாறி வரும் உணவு பழக்க வழக்கங்களில் பெரும்பாலும் கோழி இறைச்சி தினசரி உணவாகி விட்டது. நாட்டுக் கோழி, பிராய்லர் கோழி எதுவாக இருப்பினும் செரிமானம் ஆக, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்

இதனை மறுபடியும் சூடுபடுத்தி சாப்பிட்டால் ஃபுட் பாய்சனாக மாறிவிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதே போல் உருளைக்கிழங்கை சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிட்டாலும் ஃபுட் பாய்சனாக மாறிவிடும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

நார்ச்சத்து நிரம்பியுள்ள கீரையையும் சமைத்த உடன் சாப்பிட்டு விட வேண்டும். இதனை சூடுபடுத்தி சாப்பிட்டால் புற்றுநோய் உருவாகும் வாய்ப்புக்கள் அதிகம். அந்த வகையில் பீட்ரூட்டையும் சமைத்ததும் சாப்பிடுவதே சிறந்தது.

மேலும் முட்டை, காளான் வகைகளையும் இரண்டாம் முறை சூடுபடுத்தினால் விஷமாக மாறி, செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உருவாக்கி விடும். இந்த உணவுகள் மட்டுமல்ல மீந்துவிட்ட சாதத்தையும் தண்ணீர் ஊற்றி விட்டு அடுத்த நாள் காலை ஐஸ்பிரியாணியாக சாப்பிடலாம்.

அதை விடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து குக்கரில் மறுபடியும் ஒரு விசில் விட்டு சாப்பிடுவது ஆபத்தானது என்று எச்சரிக்கின்றனர் ஊட்டச்சத்து வல்லுனர்கள்.

foods,nutrition,experts,potatoes ,உணவுகள், ஊட்டச்சத்து, நிபுணர்கள், உருளைக்கிழங்கு


Tags :
|