Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • குறட்டை விடும் பழக்கம் உள்ளவரா? எதனால் ஏற்படுகிறது என தெரிந்து கொள்ளுங்கள்!!!

குறட்டை விடும் பழக்கம் உள்ளவரா? எதனால் ஏற்படுகிறது என தெரிந்து கொள்ளுங்கள்!!!

By: Nagaraj Wed, 22 Feb 2023 2:48:30 PM

குறட்டை விடும் பழக்கம் உள்ளவரா? எதனால் ஏற்படுகிறது என தெரிந்து கொள்ளுங்கள்!!!

சென்னை: குறட்டை விடும் பழக்கம் உள்ளதா குறட்டை விடும் பழக்கத்தால் அவதிப்படுகின்றீர்களா. இதை படியுங்கள்.

குறட்டை விடுவது ஒரு சிரிப்பிற்குரிய விஷயம் கிடையாது. இதனால் உலகில் உள்ள பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை குறட்டை விடுபவர்கள் தங்களை மட்டுமல்லாமல், தங்களுடைய துணைவர்களையும் பாதிக்கின்றனர். ஆண் பெண் யாராக இருந்தாலும் குறட்டை விடுவது இருவருக்கும் வரும் பிரச்சனையாக அமைகின்றது. இதை செய்தோம் என்று யாரேனும் கூறும் போது மிகுந்த இக்கட்டான நேரத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

குறட்டை வருவதற்கான காரணம்: குறட்டை வருவதற்கு பல காரணங்கள் உண்டு என்பது தான் இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயமாகும். உடல் பருமன், தொண்டை அடைப்பு மற்றும் தொண்டை தசையிலுள்ள தளர்வு மற்றும் வீக்கம் என பலவற்றை குறட்டைக்கு காரணமாக சொல்லலாம். மூச்சு விடும் போது தொண்டையில் உள்ள மெல்லிய தசை ஆடுவதால் குறட்டை சத்தம் வருகின்றது.

snoring,causes,warm water,salt,can be avoided ,குறட்டை, காரணங்கள், வெதுவெதுப்பான நீர், உப்பு, தவிர்க்கலாம்

மல்லாந்து படுத்து உறங்கும்போது, தளர்வு நிலையில் நாக்கு சிறிது உள்வாங்கித் தொண்டைக்குள் இறங்கிவிடும் இதனால் மூச்சிப் பாதையில் தடை ஏற்பட்டுக் குறட்டை வருகிறது. அதிக தூக்க மாத்திரை எடுத்துக் கொள்பவர்களுக்கும் குறட்டை அதிகமாக வரும்.

அதிக எடை, தீய பழக்கங்கள், தொண்டை அல்லது மூக்கின் வைரஸ் நோய்கள், தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொள்வது, தைராய்டு சுரப்பியின் நோய்கள், ஹார்மோன் சமநிலையின்மை போன்றவையும் குறட்டை விடுவதற்கான காரணங்கள்.

குறட்டையை தவிர்க்க சில வழிகள்: மனிதர்களில் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூங்குவதில் செலவிடுகின்றனர். தூங்கும்போது தலைப் பகுதியை ஓரளவு உயர்த்திக்கொள்ள வேண்டும். மல்லாக்கப் படுக்க வேண்டாம். ஒரு பக்கமாகத் தலையைச் சாய்த்துப் படுக்க வேண்டும். மது, புகைப்பழக்கத்தை நிறுத்த வேண்டும்.

இரவில் படுக்க செல்லும் முன், வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, வாயில் ஊற்றி சிறிது நேரம் கொப்பளித்தால், குறட்டை விடுவதைத் தவிர்க்கலாம். அதேபோல், 2-3 துளிகள் ஆலிவ் எண்ணெய்யை வாயில் ஊற்றி பருகினால், குறட்டையில் இருந்து விடுபடலாம்.

Tags :
|
|