Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கொத்தமல்லியில் எத்தனை மருத்துவக்குணங்கள் இருக்கு என உங்களுக்கு தெரியுமா?

கொத்தமல்லியில் எத்தனை மருத்துவக்குணங்கள் இருக்கு என உங்களுக்கு தெரியுமா?

By: vaithegi Sat, 31 Dec 2022 11:10:29 AM

கொத்தமல்லியில் எத்தனை மருத்துவக்குணங்கள் இருக்கு என உங்களுக்கு தெரியுமா?

நாம் மற்ற கீரை வகைகளை வீட்டில் தினமும் பயன்படுத்துகிறோமோ இல்லையோ கொத்தமல்லியை நிச்சயம் பயன்படுத்துவோம். கொத்தமல்லி வெறும் வாசனைக்காக மட்டும் பயன்படும் ஒரு கீரை வகை என நினைப்பவர்கள் பலர். ஆனால் கொதமல்ல்லியில் எண்ணிலடங்க மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளன. இதில் வெறும் கீரை மட்டுமல்லாமல் முழு செடியும் மருத்துவ குணம் நிறைந்தது.

உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொத்தமல்லி தன்னகத்தே கொண்டுள்ளதை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பி, பி1, சி என பல வைட்டமின் சத்துக்கள் அடுக்கிக் கொண்டே போகலாம்.

coriander,herbs , கொத்தமல்லி,மருத்துவக்குணங்கள்

மேலும், இரும்புச்சத்து, கால்சியம், மாவுச்சத்து, கொழுப்புச்சத்து என உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களின் அஞ்சறை பெட்டியாக கொத்தமல்லி இருக்கிறது என்பது ஆச்சர்யமான உண்மை.

இத்தகைய ஆரோக்கிய சத்துகள் நிறைந்த கொத்தமல்லியை எளிதில், வீட்டுத் தோட்டம் மற்றும் சிறு தொட்டியில் கூட வளர்க்க முடியும்.

கொத்தமல்லியை தினமும் சரியான அளவில் உணவில் சேர்த்துக் கொண்டால், எலும்பு மற்றும் தசைகளை வலுப்படுத்தும் மருத்துவ காரணியாக கொத்தமல்லி செயல்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.வாய் நாற்றம் உள்ளவர்கள் கொத்தமல்லியை சாப்பிட்டு வந்தால், அவர்களது வயிற்றில் உள்ள புண் குணமாகி, துர்நாற்றத்திற்கு பதிலாக புத்துணர்ச்சி வீசும்.

Tags :