Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • குழந்தைகளை குளிப்பாட்டுவதில் எப்படி கவனமாக இருக்கணும் என்று தெரியுங்களா?

குழந்தைகளை குளிப்பாட்டுவதில் எப்படி கவனமாக இருக்கணும் என்று தெரியுங்களா?

By: Nagaraj Mon, 26 June 2023 11:49:10 PM

குழந்தைகளை குளிப்பாட்டுவதில் எப்படி கவனமாக இருக்கணும் என்று தெரியுங்களா?

சென்னை: குழந்தைகளை குளிப்பாட்டுவதில் கவனம் தேவை... சந்தையில் குழந்தைகளுக்கான பல சோப்புகள், ஷாம்புகள் மற்றும் கண்டிஷனர்கள் உள்ளன.

உங்களுக்கு தோல் வெடிப்புகள் அல்லது தோல் ஒவ்வாமை ஏற்பட்டால் ஷாம்பூவைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களின் தோல் வகைக்கு ஏற்ப குழந்தை மருத்துவரின் பரிந்துரையின்படி ஷாம்பு பயன்படுத்த வேண்டும்.

ஒரு நாளைக்கு ஒரு முறையாவது குழந்தைக்கு தலை குளிக்க வைக்க வேண்டும். குழந்தைகள் குளிக்க வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தவும். அதிக குளிர்ந்த அல்லது சூடான நீரைப் பயன்படுத்த வேண்டாம். குழந்தைகளுக்கான சோப்பு, ஷாம்பு, கண்டிஷனர்கள் இன்று சந்தையில் பெருகிவிட்டன. உங்களுக்கு தோல் வெடிப்புகள் அல்லது தோல் ஒவ்வாமை ஏற்பட்டால் ஷாம்பூவைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்

babies,shampoo,oil massage,eyes,ears ,குழந்தைகள், ஷாம்பூ, எண்ணெய் மசாஜ், கண்கள், காதுகள்

குழந்தைகளின் தோலுக்குப் பயன்படுத்தும் சோப்பை தலைக்கும் பயன்படுத்தலாம். குழந்தையின் தோலுக்கு ஏற்ற சோப்பின் டி.எஃப்.எம். நிலை மற்றும் பி.ஹெச் அளவு குறித்து குழந்தை நல மருத்துவரிடம் கேட்டு அதற்கான சோப்பை தேர்வு செய்ய வேண்டும்.

குழந்தைகளின் பிரத்யேக ஷாம்பூவைக் கொண்டு குளிக்கும்போது, தலையில் இருந்து ஷாம்பு முழுவதுமாக வெளியேறும் வகையில் நன்றாகக் கழுவவும். குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் ஷாம்பூவை பெரியவர்கள் பயன்படுத்தக் கூடாது.

குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் செய்ய சுத்தமான நல்லெண்ணெய்யை பயன்படுத்தலாம். கண்கள், காதுகள், மூக்கு மற்றும் வாய் ஆகியவற்றில் அத்தியாவசிய எண்ணெய் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Tags :
|
|