Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • தயிருடன் என்னென்ன உணவுகளை சேர்த்து சாப்பிடக் கூடாதுனு தெரியுமா?

தயிருடன் என்னென்ன உணவுகளை சேர்த்து சாப்பிடக் கூடாதுனு தெரியுமா?

By: Monisha Thu, 07 July 2022 9:33:36 PM

தயிருடன் என்னென்ன உணவுகளை சேர்த்து சாப்பிடக் கூடாதுனு தெரியுமா?

தயிரில் உள்ள புரோ-பயுாடிக் (pro-biotic food) உடலில் நல்ல பாக்டீரியாக்களின் அளவை அதிகரிக்கச் செய்து குடலுக்கு இதமளிக்கிறது.தயிரில் நிறைந்துள்ள வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவை நம்முடைய உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்கின்றன.
மீன் உணவுகளை சமைக்கும்போதும் சாப்பிடும் போது ஒருபோதும் அதனுடன் தயிர் சேர்க்கக் கூடாது.இரண்டுமே அதிக புரதங்கள கொண்ட உணவுகள் என்பதால் அதை தவிர்க்க வேண்டியது அவசியம்.

பூரி போன்ற எண்ணெய் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளுடன் தயிரை சேர்த்து சாப்பிடும்போது அது செரிமானத்தின் வேகத்தை மெதுவாக்கும். உடல் சோர்வை ஏற்படுத்தி நாள் முழுக்க சோம்பலாகவே வைத்திருக்கச் செய்யும்.மாம்பழம் உடல் சூட்டை அதிகரிக்கக் கூடியது. தயிர் உடலைக் குளிர்ச்சியாக்கும். இவை இரண்டும் ஒன்றாகச் சேரும்போது வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் உண்டாகும்.

curd,fish,foods,vitamins ,தயிர், வைட்டமின்,மீன்,உணவு,

தயிர் பச்சடி என்று தயிருடன் வெங்காயத்தை சேர்த்து ஊறவைத்து எல்லா வகை உணவுக்கும் எடுத்துக் கொள்கிறோம். குறிப்பாக பிரியாணி போன்ற மசாலாக்கள் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளோடு சேர்த்து சாப்பிடுகிறோம். ஆனால் அது மிகவும் தவறு.

மாம்பழத்தைப் போலவே வெங்காயமும் இயற்கையாக உடல்சூட்டை அதிகரிக்கச் செய்யும்.

கேட்கவே வித்தியாசமாக இருக்கிறதா? நம்மில் நிறைய பேர் தயிர் சாதம் செய்யும்போது அதில் பால் நிறைய சேர்த்து, தயிருடன் கலந்து செய்வார்கள். ஆனால் அப்படி செய்யக் கூடாது.பால் மற்றும் தயிர் இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல் மற்றும் உடல் வீக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Tags :
|
|
|