Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

By: Karunakaran Thu, 17 Sept 2020 1:08:07 PM

உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

குழந்தைகள், கொரோனா பீதியால் வீடுகளுக்குள் அடைபட்டுக் கிடக்கிறார்கள். ஊரடங்கு காலம் முடிந்ததும், குழந்தைகள் சுதந்திரமாக தங்களை ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்ள அவர்களை ‘சம்மர் கேம்ப்’களில் சேர்த்துவிடலாம் என்று பெற்றோர்கள் நினைப்பதுண்டு. ‘சம்மர் கேம்ப்’ நடத்துபவர்களில் சிலர் அனுபவம் இல்லாதவர்களாக இருப்பார்கள். சரியான கட்டமைப்புகள் அவர்களிடம் இருக்காது. கோடை காலம் முடிவதற்குள் பணம் சம்பாதித்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் முகாம் நடத்துகிறவர்களிடம், உங்கள் குழந்தைகளை சேர்த்துவிடக்கூடாது.

கடந்த காலங்களில் சில முகாம்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் கூட நிகழ்ந்திருக்கின்றன. அதனால் குழந்தைகள் மனோரீதியாக பாதிக்கப்படும் சம்பவங்களும் ஏராளமாக நடைபெற்றுள்ளன. ஆகவே உங்கள் மகள், மகனை சம்மர் கேம்ப் களுக்கு அனுப்புவதாக இருந்தால், நீங்கள் நிறைய விஷயங்களை கவனித்து தரமான முகாமை தேர்ந்தெடுக்கவேண்டும். உங்கள் குழந்தைகளுக்கு பாலியல் சார்ந்த அடிப்படை விஷயங்களை கற்றுக்கொடுங்கள். முக்கியமாக உடல் உறுப்புகளை பற்றி எடுத்துக் கூறுங்கள்.

summer camp,teach,children,isolation ,கோடைக்கால முகாம், கற்பித்தல், குழந்தைகள், தனிமை

உடல் ஆரோக்கிய காரணங்களை தவிர்த்து, வேறு எந்த காரணங்களுக்காகவும் யாரும் தொடுவதோ, பார்ப்பதோ, அவைகளை பற்றி பேசுவதோ சரியானதல்ல’ என்பதை புரிய வையுங்கள். தவறான தொடுதல் எது?, சரியான தொடுதல் எது? என்பதையும் குழந்தை களுக்கு சொல்லிக்கொடுங்கள். நீங்கள் உங்கள் குழந்தையை சேர்க்க விரும்பும் முகாம் பற்றி, முழுமையாக விசாரியுங்கள். அதை நடத்துபவர்களின் பின்னணி, அனுபவம், இடம், சூழல், பயிற்சியாளர்கள் பற்றி எல்லாம் விசாரித்து, திருப்தியடைந்தால் மட்டும் அங்கு கொண்டுபோய் சேருங்கள்.

தினமும் பயிற்சி முடிந்து வீடு திரும்பியதும் அங்கு என்ன நடந்தது என்று உங்கள் பிள்ளைகளிடம் கேளுங்கள். சந்தேகத்திற்கு இடமான எல்லா விஷயங்களையும் குழந்தைகளிடம் விளக்கமாக கேளுங்கள். பயிற்சிக்கு செல்லும் இடங்களில் உங்கள் குழந்தைகள் தனிமையில் இருக்க அனுமதிக்க வேண்டாம். மத்திய அரசு 2012-ம் ஆண்டில், குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாவதை கட்டுப்படுத்தும் விதத்தில் சட்டம் இயற்றியுள்ளது. அதில் ‘ஒரு நிறு வனத்தில் குழந்தைகள் பாலியல் பாதிப்புக்கு உள்ளானால், அதற்கு நிர்வாகம்தான் பொறுப்பு’ என்று கூறப்பட்டுள்ளது. இது பள்ளிகள், கோடைகால பயிற்சி முகாம்கள் அனைத்துக்கும் பொருந்தும்.

Tags :
|