Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • பால், தயிர், மோரை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் தெரியுமா!

பால், தயிர், மோரை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் தெரியுமா!

By: Nagaraj Fri, 02 Oct 2020 10:26:00 AM

பால், தயிர், மோரை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் தெரியுமா!

பால், தயிர், மோர் இவற்றை எந்த நேரங்களில் சாப்பிட வேண்டும் என்று தெரியுங்களா? தெரிந்து கொள்ளுங்கள்.

பால், தயிர், மோர் போன்ற பால் சார்ந்த பொருட்களை குறிப்பிட்ட நேரத்தில் பருகினால் மட்டுமே சரியான அளவில் செரிமானமாகி அதில் உள்ள முழுச்சத்துக்களும் நமக்கு கிடைக்கும்.

பகலில் எப்போது வேண்டுமானாலும் பால் குடிக்கலாம் என்றாலும் தூங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன் பால் குடிப்பது ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுக்கும். உடல் சோர்வை நீக்கும். பால் செரிமானவதற்கு தாமதமாகும் என்பதால் மற்ற உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது.

milk,yogurt,lentils,morning,afternoon,flatulence ,பால், தயிர், பெருங்காயம், காலை, மதியம், வாயுப்பிடிப்பு

தினமும் மதிய உணவில் தயிர் சேர்த்து சாப்பிடலாம். ஆனால் வெறும் வயிற்றில் தயிர் சாப்பிட்டால் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி விடும். இரவில் தயிர் சாப்பிடுவதையும், தயிரை சூடுபடுத்தி சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். தயிருடன் சிறிது சர்க்கரை சேர்த்து குடிக்க செரிமானப் பிரச்சனைகள் சீராகும்.

ஆனால் மோரை எந்த நேரத்திலும் பருகலாம். காலை, மதியம், மாலை, இரவு என எந்த வேளையிலும் மோர் குடிக்கலாம். செரிமானப் பிரச்சினை இருப்பவர்கள் காலையில் வெறும் வயிற்றில் மோர் பருகிவர நல்ல குணம் காணலாம். வாயுப்பிடிப்பு இருப்பவர்கள் காலை உணவிற்கும், மதிய உணவிற்கும் இடைப்பட்ட வேளையில் பெருங்காயம் சேர்த்து பருகலாம்.

Tags :
|
|