Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • குறட்டை விடுகிறீர்களா? எளிமையான தீர்வுகள் உங்களுக்காக!!!

குறட்டை விடுகிறீர்களா? எளிமையான தீர்வுகள் உங்களுக்காக!!!

By: Nagaraj Sun, 24 July 2022 5:43:45 PM

குறட்டை விடுகிறீர்களா? எளிமையான தீர்வுகள் உங்களுக்காக!!!

சென்னை: குறட்டை விடுவது சிலருக்கு சிரிப்பிற்குறிய விஷயம் சிலருக்கு கடுமையான விஷயம். இதனால் உலகில் உள்ள பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை குறட்டை விடுபவர்கள் தங்களை மட்டுமல்லாமல், தங்களுடைய துணைவர்களையும் பாதிக்கின்றனர். ஆண் பெண் சிறு வயதினர் யாராக இருந்தாலும் குறட்டை விடுவது அனைவருக்கும் சமம் .

உடலிலிருந்து வெளியேறும் கழிவுகளில் வியர்வை தடை ஏற்படுவது மற்றும் உடல் பருமனால், தொண்டையில் சளியால் அடைப்பு , தசை தளர்வு , வீக்கம் என குறட்டைக்கு காரணம். மூச்சு விடும் போது தொண்டையில் உள்ள மெல்லிய தசை தளர்வு குறட்டை சத்தம் வருகின்றது.

இத்தகைய குறட்டையை நிறுத்த நினைத்தாலும், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது நம்மை அறியாமலேயே குறட்டையானது வந்து விடுகின்றது. இயற்கை காற்றோட்டம் நிறைந்த படுக்கை அறைகள் அமைக்க வேண்டும்.

snoring,causes,turmeric,cardamom,remedy ,குறட்டை, காரணங்கள், மஞ்சள்பொடி, ஏலக்காய், தீர்வு

சமீபத்திய ஆய்வு ஒன்றில் உடல் பருமன் மற்றும் குண்டான குறட்டை விடும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக ஏராளமானவர்கள் குறட்டையால் தூக்கத்தை தொலைத்து, வாழ்ந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறட்டையை தடுக்க வழிமுறைகள்: கால் ஸ்பூன் மஞ்சள் பொடி எடுக்கவும். இதில் ஏலக்காய் 2 தட்டிபோடவும் இரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆக வடிகட்டி தேன் சேர்க்கவும்.

இரவு தூங்கும் முன்பு தினமும் 50 மில்லி அளவுக்கு குடித்துவர குறட்டை ஒலி குறைந்து விடும். நெஞ்சு சளியை கரைக்கும், திப்பிலி பொடி குறட்டைக்கான மருந்து. அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சிறிது திப்பிலி பொடி, தேன் சேர்க்கவும்.இதை அனைத்தும் ½ , ¼ ஸ்பூன் அளவுக்கு எடுத்து இரவு தூங்கப்போகும் முன்பு சாப்பிட்டு வர குறட்டை குறைய அடிப்படை வழிமுறைகள்.


Tags :
|