Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • அதிகப்படியான தொப்பையால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இதை சாப்பிடுங்க!

அதிகப்படியான தொப்பையால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இதை சாப்பிடுங்க!

By: Monisha Fri, 04 Dec 2020 08:46:26 AM

அதிகப்படியான தொப்பையால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இதை சாப்பிடுங்க!

சிறுதானிய வகையை சேர்ந்த கேழ்வரகு என்று அழைக்கப்படும் ராகி பல மருத்துவ குணங்களையும், ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இது பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் அல்லது குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் கொழுப்பு அதிகம் இல்லாத உணவுகளை சாப்பிடுவதோடு, உடற்பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும். தினமும் காலையில் ராகி சாப்பிட்டால் அதிகப்படியான தொப்பையால் அவதிப்படுகிறவர்கள் தொப்பை முழுக்க கரைந்து, தட்டையான வயிறைப் பெற முடியும்.

காலையில் ராகி சாப்பிடுவதனால், அதில் உள்ள அதிக அளவிலான அமினோ அமிலங்கள், ட்ரிப்ஃபன் அடிக்கடி பசி எடுப்பதைத் கட்டுப்படுத்துவதால் உடல் எடை சீக்கிரத்தில் குறைகின்றது. மேலும் விரைவில் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் கேழ்வரகு உணவுகளை அதிகம் உண்ண வேண்டும்.

cereal,ragi,body weight,belly,health ,சிறுதானியம்,ராகி,உடல் எடை,தொப்பை,ஆரோக்கியம்

கேழ்வரகில் புரதம், நார்ச்சத்து, மக்னிசியம் போன்ற வேதி கலவைகள் அதிகம் இருப்பதால் உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் பிராண வாயுவை கிரகிக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறது. இதனால் இது உடல் சோர்வை நீக்கி உடலுக்கு அதிக உற்சாகமும், ஆரோக்கியத்தையும் தருகிறது. எனவே உடலுக்கு அதிக வேலையை கொடுக்கும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு சிறந்த ஊட்ட உணவாக ராகி இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு ராகி மிகவும் நல்லது. இது ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். எப்போதும் சீராக ரத்த அழுத்தத்தையும் வைத்திருக்கச் செய்யும். நார்ச்சத்து அதிகம் உள்ள கேழ்வரகு உணவுகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவது செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும்.

ராகியில் அதிக அளவில் கால்சியம், வைட்டமின் டி ஆகியவை இருப்பதால் இது எலும்புகளுக்கு அதிக பலம் கொடுக்கக் கூடியது. அதிலும் குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் கூட இதை எளிதாக சாப்பிடலாம்.

Tags :
|
|
|