Advertisement

மனசு சூப்பரா வேலை செய்யணுமா.. கேள்வி கேளுங்கள்..

By: Monisha Thu, 07 July 2022 8:12:21 PM

மனசு சூப்பரா வேலை செய்யணுமா..  கேள்வி கேளுங்கள்..

சைக்காலஜி மனிதர்களின் மனதை பற்றி படிக்கும் சொல் என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் மனிதன் செய்யும் ஒவ்வொரு விஷயத்துக்கு பின்பும் உளவியல் உள்ளது.இது ஆரோக்கியம் சம்பந்தப்பட்டதும் கூட என்பதால் இது குறித்து தெரிந்து கொள்வது நல்லது.மனசு இருக்கே. அதை விட சூப்பரான ஒரு செயல்பாட்டை வேறு எங்குமே நாம் பார்க்க முடியாது. உலகில் உள்ள எல்லாவற்றையும் தெரிந்து விட்டேன் என்று யார் சொன்னாலும் அதை நம்பாதீங்க.
காரணம், அடுத்தவர் உள்ளத்தில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் திறமை இருந்தால்தான் உண்மையிலேயே நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது என்று அர்த்தம்.அதற்கு நமக்கு கை கொடுப்பது உளவியல். உளவியல் என்பது எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய வாழ்வியல் அறிவியலாகும் .

psychology,soul,brain,questions ,சைக்காலஜி, உளவியல்,மனிதர்,மனசு,

மனித வாழ்க்கையில் எப்போதுமே எதற்குமே. ஏன்?எதற்கு? எப்படி? என கேள்வி கேட்க வேண்டும். இப்படி கேள்வி கேட்க தொடங்கியதால் தான் அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்தது. மனித உடலில் மனம் எங்கே இருக்கிறது என்ற கேள்வி பிறந்தது?உளவியல் துறை புதிதாக தோன்றியபோது உள்ளத்தைப் பற்றிய கல்வி எப்படி ஒரு அறிவியலாகும்? அதாவது நம் புலன் உறுப்புகளால் கண்டறிய முடியாத ஒன்று எப்படி அறிவியலாகும் என்று தர்க்கம் செய்தது கூட உண்டு.

மனம் என்பது ஒரு செயல் பல்வேறு உறுப்புகளின் செயல்பாடு. குறிப்பாக மூளை நரம்பு மண்டலம் சுரப்பு மண்டலம் என உடலின் பல்வேறு பாகங்களின் கூட்டு செயல்பாடு தான். புலியையோ நாயையோ அல்லது பாம்பையோ கண்டதும் அவசர அவரமாக நம்மை தப்பிக்க வைக்க ஓடு.ஓடு.. என்கிறது நமது மூளை. அந்த உத்தரவுக்கு கட்டுப்பட்டு நாமும் ஓடுகிறோம்.

இன்று ஒருவனின் பிரச்சனைகளை, மனக் குமுறலை,போராட்டங்களை தன் வேதனையை காது கொடுத்து கேட்பதற்கு யாருக்கும் பொறுமை இல்லை. தன் வேதனையை பகிர்ந்து கொள்ள யாராவது கிடைக்க மாட்டார்களா என்று தேடி அலைகிறான். சுகமான, மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள பலரும் தயாராக இருக்கிறார்கள். ஆனால் ஒருவனின் தோல்வியில் துயரத்தில் பங்கு கொள்ள,இதமாக பேச யாரும் தயாராக இல்லை. இதன் காரணமாகவே இன்று தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது.

மனசு விட்டுப் பேச இங்கு ஆட்கள் இல்லை. எத்தனை முதியவர்கள் பேச்சுத் துணைக்கு ஆள் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் தெரியுமா. எத்தனை குழந்தைகள் வீட்டில் தனிமையில் வாடுகிறார்கள் தெரியுமா. பேச முடியாமல் போய் மன அழுத்தத்தில் மிதக்கும் பெண்கள் எத்தனை பேர் தெரியுமா. காலம் அந்த அளவுக்கு மோசமாக போய்க் கொண்டிருக்கிறது. மனசு விட்டுப் பேச வேண்டும்.அதற்கு நல்ல தோள் வேண்டும். அந்தத் தோளைப் பிடித்துக் கொண்டு பேச வேண்டும். இது இல்லாமல்தான் பலருக்கு வாழ்க்கை சூனியமாகிக் கிடக்கிறது.ஆதலால் நேரத்தை ஒதுக்கி பிறர்க்கு நல முறையில் செலவிடுங்கள்.அது உங்களுக்கும் நல்லது பிறர்க்கும் நல்லது.

Tags :
|
|