Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கம்ப்யூட்டர் முன் வேலை செய்கிறீர்களா? கண் மசாஜ் செய்வது மிகவும் அவசியம்!

கம்ப்யூட்டர் முன் வேலை செய்கிறீர்களா? கண் மசாஜ் செய்வது மிகவும் அவசியம்!

By: Monisha Fri, 11 Dec 2020 09:51:44 AM

கம்ப்யூட்டர் முன் வேலை செய்கிறீர்களா? கண் மசாஜ் செய்வது மிகவும் அவசியம்!

கண்களை பாதுகாக்க கண் மசாஜ் மிக அவசியமான ஒன்று குறிப்பாக கம்ப்யூட்டர் முன் வேலை செய்வோர் இதனை கண்டிப்பாக செய்ய வேண்டும். இந்த பதிவில் கண் மசாஜ் செய்வது குறித்து பார்க்கலாம்.

குளிர்ந்த மற்றும் சூடான நீரில் துண்டை நனைத்து புருவம், மூடிய இமைகள், மற்றும் கன்னங்கள் மீது அழுத்தவும். இரண்டையும் மாற்றி மாற்றி செய்யவும். ஆனால் குளிர்ந்த நீரில் அழுத்துவதை கடைசியாக அமையும்படி செய்யவும்.

சூடான நீரில் ஒரு துண்டை நனைத்து, கண்களை தவிர, கழுத்து, தலை மற்றும் கன்னங்கள் என அனைத்து பகுதிகளிலும், தேய்த்தல் வேண்டும். பின்னர், விரல்களால் மெதுவாக நெற்றி மற்றும் மூடிய கண்களை மசாஜ் செய்யவும். கண்களை மூடி 1-2 நிமிடங்கள் விரல்களால் வட்ட இயக்கங்களில் மசாஜ் செய்யவும். பின் கைகளை கழுவி சுத்தமாகவும், அதிகமாக அழுத்தாமல் சாதாரணமாக அழுத்துவது அவசியம்.

eye massage,computer,eyelids,hot water,pencil ,கண் மசாஜ்,கம்ப்யூட்டர்,கண் இமைகள்,சூடான நீர்,பென்சில்

மெதுவாக இரண்டு கைகளால் மூன்று விரல்கள் கொண்டு மேல் கண் இமைகள் அழுத்தவும். பின்னர், 1-2 வினாடிகளில் அப்படியே அழுத்தியவாறு இருந்து பின் விடுவிக்கவும். இதை தொடர்ந்து 5 முறை செய்யவும். அமைதியாக உட்கார்ந்து, கண்களை இடதுபுறமாகவும் பின் வலதுபுறமாகவும் சுழற்ற வேண்டும். 5 முறை செய்யவும், அதன் இடையே ஒவ்வொரு முறையும் கண்களை சிமிட்டவும்.

வினாடிகள் ஒரு தொலைதூர பொருளைப் 150 அடி அல்லது 50 மீட்டர் மேல் பார்க்கவும். பின்னர், மெதுவாக கண்களை அருகில் உள்ள பொருள் மீது 30 அடி அல்லது 10 மீட்டர் தூரத்தில் 10-15 வினாடிகள் பார்க்கவும். மீண்டும் தொலைதூர பொருளை பார்க்கவும். இதனை 5 முறை செய்யவும்.

முழங்கை நீட்டி ஒரு பென்சில் வைத்து, மூக்கின் முன் மெதுவாக நகர்த்தி வரவும். கண்களை அந்த பென்சிலைப் பார்த்தபடியே நகர்த்துவதை கவனம் செலுத்தவும். இதனை 10 முறை செய்யவும். தலையை அசக்காமல் மேலும் கீழுமாக பார்க்கவும். இதனை 8 முறை செய்தல் வேண்டும். பின்னர் இடது வலது என அசைக்கவும். இதையும் 8 முறை செய்தல் வேண்டும்.

eye massage,computer,eyelids,hot water,pencil ,கண் மசாஜ்,கம்ப்யூட்டர்,கண் இமைகள்,சூடான நீர்,பென்சில்

கண்களை அதன் போக்கில் போகும் போது அதனை கட்டாயப்படுத்தி, நம் திசையில் பார்ப்பது தவறு. அப்படி செய்தல் பார்வை மோசமாகிவிடும். எதிரில் உள்ள சுவரை பார்த்தப்படியே உங்கள் கண்களால் எழுத முயற்சிக்கவும் அதுவும் தலையை நகர்த்தாமல் எழுத வேண்டும். இது முதலில் கஷ்டமாக இருக்கும் மீண்டும் மீண்டும் செய்தால், பின் பழகிவிடும்.

எப்போதும் கண் உடற்பயிற்சியை முடிக்கும் போது, உள்ளங்கையால் தடவி முடிப்பது நல்லது. நீண்ட நேரம் தொடர்ந்து பயிற்சிகள் செய்வதை விட, தினமும் சிறிது நேரம் செய்தல் நல்லது.

Tags :