Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • குழம்பு வகைகள் சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறதா? என்ன செய்யணும்!!!

குழம்பு வகைகள் சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறதா? என்ன செய்யணும்!!!

By: Nagaraj Sat, 04 Nov 2023 1:51:53 PM

குழம்பு வகைகள் சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறதா? என்ன செய்யணும்!!!

சென்னை: தேங்காய், புளி சேர்த்த பொரியல், குழம்பு வகைகளைச் சாப்பிட்டதும் மொத்த உணவும் சில மணி நேரம் நெஞ்சுக்குழிக்குள் இருப்பதைப் போல சிலருக்கு உணர்வு ஏற்படும். இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

இதுபோன்ற அறிகுறியை வைத்துப் பார்க்கும்போது இது அசிடிட்டி எனப்படும் அமிலம் எதுக்களிக்கும் பிரச்னை. நீண்டகாலத்துக்கு நெஞ்செரிச்சல் பிரச்னை தொடரும் நிலையில், உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. அதைத் தவிர்ப்பதற்கு மருத்துவர்கள் ஆன்டாசிட் மருந்துகள் கொடுப்பார்கள்.

எனவே அசிடிட்டி பிரச்னை ரொம்பகாலமாக இருந்ததா என்பதை செக் செய்ய வேண்டும். உணவை சரியாக மென்று சாப்பிட வேண்டும். குழம்பு வகைகளில் புளி இருக்கும். புளி அவசியம்தான். ஆனால் உங்களுக்கு நெஞ்செரிச்சல் பிரச்னை இருக்கும்பட்சத்தில், புளியின் அமிலத்தன்மை காரணமாக, அது நெஞ்சுப்பகுதியை அடைப்பதுபோல உணரச் செய்யலாம்.

coconut,tamarind,foods,fermentation,solution,experiment ,தேங்காய், புளி, உணவுகள், எதுக்களித்தல், தீர்வு, பரிசோதனை

உணவை மென்று சாப்பிட வேண்டியதன் அவசியம் பலருக்கும் தெரிவதில்லை. உணவை நன்கு வேகவைத்துச் சாப்பிட வேண்டியதும் அவசியம். தொண்டைப்பகுதியில் உணவு அடைப்பது போன்று உணரும்போது சிலர், தண்ணீர் குடித்துக் குடித்து உணவை விழுங்குவார்கள். இது தவறு.

எப்படிப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது இப்படி உணர்கிறார்கள் என்பதைக் குறித்துவைத்துக்கொண்டு, மருத்துவரிடம் செல்லும்போது விளக்கமாகச் சொன்னால், மருத்துவரால் சரியான சிகிச்சையைப் பரிந்துரைக்க முடியும். தேவைப்பட்டால் எண்டாஸ்கோப்பி பரிசோதனை செய்யச் சொல்வார்கள்.

தேங்காய், புளி சேர்த்த உணவுகளை நிறுத்துவது மட்டும் தீர்வாகாது. பிரச்னைக்கான காரணம் அறிந்து சிகிச்சை எடுத்தால்தான் அந்த பாதிப்பு மீண்டும் வராமலிருக்கும்.

Tags :
|