Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • அன்னாசி பழத்தில் பல வியாதிகளை குணப்படுத்தும்...சக்தி உள்ளதா !

அன்னாசி பழத்தில் பல வியாதிகளை குணப்படுத்தும்...சக்தி உள்ளதா !

By: vaithegi Mon, 22 Aug 2022 8:45:39 PM

அன்னாசி பழத்தில் பல வியாதிகளை குணப்படுத்தும்...சக்தி உள்ளதா !

நாம் சாப்பிடக்கூடிய அன்னாசி பழத்தில் நன்மைகளை பாருங்கள்.அன்னாசி பழத்தில் வைட்டமின் 'பி' உள்ளதால் உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த மருந்தாக உள்ளது.நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.


மேலும் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.அன்னாசி பழச்சாறு சிறுநீர் கழிவை தூண்டி, விஷம் மற்றும் கழிவுப் பொருட்களை வெளியேற்றி, சிறுநீரகங்கள் சிறப்பாகச் செயல்பட உதவும்.அன்னாசிப் பழத்தை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் ஒரு பக்க தலைவலி, மாலைக்கண் நோய், கண் பார்வை மங்கல், கண் உறுத்தல், காது வலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவதில் இருந்து விடுபடலாம். மேலும், அன்னாசிப் பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

pineapple,goodness , அன்னாசிப்பழம்,நன்மை

அதே சமயம் அன்னாசிப் பழம் குடலில் உள்ள கெட்ட கிருமிகள் மற்றும் புழுக்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது. இதில், கால்சியம் உள்ளதால் பற்கள், எலும்புகளை உறுதிப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல அன்னாசிப் பழம் சளி மற்றும் காய்ச்சலைக் கூட குணப்படுத்த வல்லது. வயிறு தொடர்பான பிரச்சனைகளைக் கூட சரி செய்கிறது.அன்னாசி பழத்தில் வைட்டமின் B என்னும் உயிர்சத்து அதிக அளவில் உள்ளது.அன்னாசி பழத்தில் அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது எலும்புகளின் வலிமையினை அதிகரிக்கின்றது. அன்னாசி பழத்தில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் ஜீரண மண்டலத்தினை வலுப்படுத்துகிறது.


இது மட்டும் இல்லாமல் அன்னாசி பழத்தில் 'ப்ரோமெலைன்' என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது மூட்டுகளில் தேய்மானம் ஏற்படும்போது ஏற்படும் வலியினை கட்டுப்படுத்த உதவுகிறது.தொண்டைப் புண், தொண்டையில் ஏற்படும் சதை வளர்ச்சி, நல்ல குரல் வளம் பெற அன்னாசிப்பழச் சாறு அருந்தி வரலாம். அன்னாசி பழ சாற்றால் வாய் கொப்பளித்தால் தொண்டை அழற்சி குணமாகும்.இவ்வளவு பயனை பெற்ற அன்னாசி பழத்தை உண்டு நலம் பெறுக.

Tags :