Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • பீர் அருந்தினால் நோய்கள் வராதா? தெரிந்துக்கொள்ளலாமா !!

பீர் அருந்தினால் நோய்கள் வராதா? தெரிந்துக்கொள்ளலாமா !!

By: Monisha Fri, 08 July 2022 6:41:58 PM

பீர் அருந்தினால் நோய்கள் வராதா? தெரிந்துக்கொள்ளலாமா !!

பீர் அருந்துவது இதய நோய், சர்க்கரை நோய் ஆகியவற்றை தடுக்கும் என்று ஆய்வு ஒன்று வியக்கத்தக்க தகவலை தெரிவித்துள்ளது. குடி குடியை கெடுக்கும் என்று என்னதான் திரும்ப திரும்ப சொல்லப்பட்டு வந்தாலும், உலக அளவில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் வருகிறது.

பீர் என்பது ஆல்கஹால் இல்லை என்று கூறி தண்ணீர் போல அருந்திகிறார்கள் இன்றைய நிலைமை அப்படி உள்ளது.

beer,reduce,illness,alcohol ,பீர் ,இதய நோய், சர்க்கரை நோய்,ஆல்கஹால் ,

போர்ச்சுக்கல் நாட்டின் போர்ட்டோ நகரில் உள்ள சுகாதார தொழில்நுட்பங்கள் மற்றும் சேவைகளுக்கான ஆராய்ச்சி மையம் அண்மையில் இந்த ஆய்வை மேற்கொண்டது. 23 -58 வயதுக்குட்பட்ட 50 க்கும் மேற்பட்டவர்களை இந்த ஆய்வுக்கு உட்படுத்தினர். அவர்களை ஆல்கஹால் கலக்காத பீர் 330 மிலி தொடர்ந்து ஒரு மாதம் குடிக்க வைத்தனர்.

அதில் அவர்களுக்கு சர்க்கரை நோய், இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்கள் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் நுண்ணுயிரிகளின் செயல்பாடு மேம்பட்டது தெரிய வந்தது.இந்த நிலையில், பீர் குடித்தால் இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் வராது என்று ஒரு ஆய்வு வியக்கத்தக்க தகவலை தெரிவித்துள்ளது. இதை கேட்ட உடனே பீர் பிரியர்களுக்கு சந்தோஷமாக தான் இருக்கும். ஆனால் அந்த ஆய்வு முடிவில் ஒரு முக்கியமான கண்டிஷனும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது ஆல்கஹால் கலக்கப்படாத பீரை பருகினால் மட்டுமே இதய மற்றும் சர்க்கரை நோய் வராமல் தடுக்கப்படுமாம்.

Tags :
|
|