Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • இனி மறக்காமல் தினமும் 1 கிளாஸ் தக்காளி ஜூஸ் குடியுங்கள்!!

இனி மறக்காமல் தினமும் 1 கிளாஸ் தக்காளி ஜூஸ் குடியுங்கள்!!

By: Monisha Tue, 02 June 2020 11:57:20 AM

இனி மறக்காமல் தினமும் 1 கிளாஸ் தக்காளி ஜூஸ் குடியுங்கள்!!

தக்காளி சாற்றை ஒரு நாளைக்கு 2 முறை அருந்துங்கள். ஏனென்றால் கண்களுக்கு பாதுகாப்பை கொடுக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் கே சத்துகள் அதிக அளவில் உள்ளது. எனவே தினமும் 1 கிளாஸ் தக்காளி சாறு குடிப்பதால் கண்கள் பாதுகாப்பாக இருக்கும்.

நன்கு பழுத்த சில தக்காளி பழங்களின் தோல் மற்றும் விதைகளை நீக்கி பழங்களை அரிந்து, ஜூஸ் எடுத்து வெறும் வயிற்றில் காலையில் பருகி வந்தால் போதும், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

உடல் எடையை குறைக்க தினமும் காலையில் வெறும் வயிற்றில் தக்காளி சாறு அருந்தினால் போதும். ஏனென்றால் தக்காளி சாற்றில் மிகுந்த குறைவான கலோரிகள் தான் உள்ளது.

tomato juice,wellness,vitamin a,vitamin k,cancer ,தக்காளி ஜூஸ்,ஆரோக்கியம்,வைட்டமின் ஏ, வைட்டமின் கே,புற்றுநோய்

தக்காளி சாறு அருந்தினால் உடல் மற்றும் கல்லீரலில் இருக்கும் நச்சுப் பொருட்களை போக்கும். மேலும் இது கல்லீரல், பித்தப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

தக்காளி சாறு உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது. ஏனென்றால் இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபோலிக் அமிலம், பீட்டா கரோட்டின் மற்றும் லுடீன் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே தினமும் தக்காளி சாறு குடிப்பதால் 18% புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கலாம் என கூறப்படுகிறது.

இதயம் என்பது நமது உடலின் முக்கியமான ஒரு உறுப்பு. இந்த இதயத்தை பாதுக்காக்க இந்த தக்காளி சாறு மிகவும் உதவுகிறது. ஏனென்றால் இதில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் C மற்றும் கோலின் ஆகியவை உள்ளன. அவை இதயத்திற்கு ஆரோக்கியதை தருகின்றன.

Tags :