Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • சோம்பு கசாயம் குடித்து வந்தால் வறட்டு இருமல் நீங்கும்

சோம்பு கசாயம் குடித்து வந்தால் வறட்டு இருமல் நீங்கும்

By: Nagaraj Mon, 20 Mar 2023 10:41:08 AM

சோம்பு கசாயம் குடித்து வந்தால் வறட்டு இருமல் நீங்கும்

சென்னை: தினசரி உணவில் சோம்பு சேர்ப்பதால், குடற்புண்கள் ஆறும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் சோம்பை கொதிக்க வைத்து குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரியான அளவில் பராமரிக்கும்.

தினமும் சோம்பு கசாயம் குடித்து வந்தால், வறட்டு இருமல், மூக்கில் நீர் வடிதல் ஆகியன குணமாகும். குழந்தைகள் வயிற்று வலியால் துடித்தால், உடனே சோம்பு கொடுங்கள். இதனால் வயிறு களிமண் போல் கனமாக இருந்தாலோ, வயிற்று வலி இருந்தாலோ, வலி உடனடியாக சரியாகும். ஒரு சிலருக்கு வேலைப்பளு, மனஅழுத்தம் மற்றும் உடல் நல பிரச்சனைகள் காரணமாக சரியாக தூக்கம் வராது.

 ,பனங்கற்கண்டு,  சோம்பு, இளம் வறுவல், தூக்கம், நரம்புகள்

இந்த பிரச்சனைகளை சரி செய்வதற்கு தினமும் சோம்பு சேர்த்த உணவுகளை உணவில் சேர்த்து வந்தால் அதில் உள்ள மெக்னீசியம் சத்து நரம்புகளுக்கு வலிமையளித்து ஆழ்ந்த தூக்கத்தை பெற உதவுகிறது.

சோம்பு தண்ணீர் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை கழிவுகள் மூலம் வெளியேற்றி, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். சோம்பைப் பொடி செய்து, தேனுடன் கலந்து (1கிராம்) சாப்பிட்டால் பெண்ணுக்கு கருப்பை பலப்படும். கல்லீரலுக்கு பலம் கிடைக்கும்.

Tags :