Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ஐஸ் தண்ணீரைக் குடிப்பதால், உணவுகள் செரிமானமாவதில் இடையூறு ஏற்படும்

ஐஸ் தண்ணீரைக் குடிப்பதால், உணவுகள் செரிமானமாவதில் இடையூறு ஏற்படும்

By: Nagaraj Sat, 22 July 2023 9:29:48 PM

ஐஸ் தண்ணீரைக் குடிப்பதால், உணவுகள் செரிமானமாவதில் இடையூறு ஏற்படும்

சென்னை: குளிர்ச்சியான தண்ணீரால் ஏற்படும் தீமைகள்... தாகத்தைத் தணிப்பதற்கு குளிர்ச்சியான நீரைத் தான் பருக விரும்புவோம். அதிலும் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு களைப்பாக வரும் போது ஐஸ் வாட்டர் குடித்தால் அடடா என்று இருக்கும் என்பது பலரது எண்ணம்.

அடிக்கடி குளிர்ச்சியான நீரைப் பருகினால், உடலினுள் பல பிரச்சனைகள் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஐஸ் தண்ணீரைக் குடிப்பதால், உணவுகள் செரிமானமாவதில் இடையூறு ஏற்படும். எப்படியெனில் குளிர்ச்சியான நீரைப் பருகும் போது இரத்த நாளங்கள் சுருங்கும்.

இதன் காரணமாக செரிமான செயல்பாடு தாமதமாக்கப்படுவதோடு, உணவுகளும் முறையாக செரிமானமாகாமல் இருக்கும். நம் உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். ஆனால் இதற்கு குறைவான வெப்பநிலையில் எதையேனும் பருகினால், அந்த வெப்பநிலைக்கு உடலை சீராக்க ஆற்றல் தேவைப்படும்.

body,heartbeat,icewater,nervous system,spontaneity, ,இதயத்துடிப்பு, உடல், ஐஸ்வாட்டர், தன்னிச்சை, நரம்பு மண்டலம்

இப்படி ஆற்றலானது உண்ணும் உணவை செரிக்க பயன்படாமல், உடல் வெப்பநிலையை சீராக்க பயன்படுத்தினால், உணவுகளில் உள்ள சத்துக்கள் உறிஞ்ச முடியாமல், நாளடைவில் இதன் காரணமாகவே ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.

குளிர்ச்சியான நீரைப் பருகும் போது, சுவாசப் பாதையை பாதுகாக்கும் படலமான சீதச்சவ்வு பாதிப்பிற்குள்ளாகும். இப்படி ஐஸ் தண்ணீரை தினமும் அதிகம் குடித்து வந்தால், அந்த சவ்வு மிகுதியாக பாதிக்கப்பட்டு, அதனால் எளிதில் நோய்த்தொற்றுக்கள் ஏற்பட்டு, தொண்டையில் புண் உருவாகும்.

ஐஸ் தண்ணீரைப் பருகினால், இதயத்துடிப்பு குறைய ஆரம்பிக்கும். ஐஸ் தண்ணீரைக் குடித்தால், சஞ்சாரி நரம்பு தூண்டப்படும். இந்த நரம்பானது மண்டையோட்டின் 10 ஆவது நரம்பு மற்றும் இது உடலின் தன்னாட்சி நரம்பு மண்டலம். இந்த நரம்பு தான் உடலின் தன்னிச்சையற்ற செயல்களைக் கட்டுப்படுத்துகிறது. குளிர்ச்சியான நீரைப் பருகும் போது இந்த நரம்பு இதயத்துடிப்பை குறையச் செய்யும்.

Tags :
|